தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவரது கைவசமாக தற்போது 9 படங்களில் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3 படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமான அனிருத் கொலவெறி என்ற பாடல் மூலம் உலகளவில் பிரபலமானார். அதன்பிறகு விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்திலும் நன்றாக இசையமைக்க தொடர்ந்து பல நடிகர்களின் படங்களில் இசை அமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அதன்பிறகு தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்க கூடிய நடிகர்களான ரஜினி, அஜித் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்தார். பின்பு தனுஷ், சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண் போன்ற தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார்.
தற்போது அனிருத் 9 படங்களுக்கு இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- விக்ரம்
- தளபதி 65
- இந்தியன் 2
- சியான் 60
- காத்துவாக்குல ரெண்டு காதல்
- தனுஷ் 44
- சிவகார்த்திகேயன் டான்
- சிவகார்த்திகேயனின் 17
- டாக்டர்
போன்ற படங்களுக்கு அனிருத் இந்த ஆண்டு இசையமைக்க உள்ளார். தொடர்ந்து பல படங்களுக்கு அனிருத் இசையமைக்க உள்ளதால் அனிருத்திடம் தங்களது படத்திற்கு முதலில் இசை அமைக்குமாறு அனைத்து இயக்குனர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனால் அனிருத் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துப்போய் உள்ளதாகவும் 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே அனிருத்திற்கு இத்தனை படங்கள் இசையமைக்க உள்ளதால் மற்ற இசையமைப்பாளர்கள் ஆச்சரியத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.