செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ஒரு கோடி சம்பளம் கொடுத்தும் சிஎஸ்கேக்கு இசையமைக்க மறுத்த அனிருத்.. காரணம் கேட்டா ரொம்ப ஷாக்கீங்க இருக்கே

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 போட்டியில் ஐந்தாவது முறையாக தோனி தலைமை வகித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. கடந்தாண்டு இந்த அணி படுதோல்வியடைந்த நிலையில், இந்தாண்டு கடைசி தருணத்தில் என்ன நடக்கும் என்ற பல எதிர்பார்ப்புக்கு இடையே குஜராத்துக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியை சிஎஸ்கே அணி வென்றது.

இதனிடையே இப்போட்டியில் கடைசி பந்தை வீசி வெற்றி வாய்ப்பை பெற்றுக்கொடுத்த ஜடேஜாவை, தோனி தூக்கி பிடித்து, கட்டியணைத்து, ஆனந்த கண்ணீரில் மூழ்கிய காட்சி இணையத்தில் தற்போது வரை வைரலாக உள்ளது. மேலும் பல வருடங்கள் கழித்து சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை பார்க்க ரசிகர்கள் லைன் கட்டி நின்று ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கி தோனியின் தரிசனத்தை பெற்றனர்.

Also Read: அனிருத்தை ரிஜெக்ட் செய்த ஏஜிஎஸ்.. தளபதி 68இல் யுவன் வர காரணம

மேலும் இவர்களோடு இணைந்து திரைபிரபலங்களும் பலர் போட்டியை காண மைதானத்தில் வந்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினர். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளரான அனிரூத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தீம் சாங் கம்போஸ் பண்ணும் வாய்ப்பு வந்தும் அதை அவரே நிராகரித்த சம்பவத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

2010 ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு, சிஎஸ்கே அணிக்கான விசில் போடு பாடல் வெளியாகி பட்டித் தொட்டியெங்கும் வைரலானது. இன்று வரை இந்த பாடலுக்கு மவுசு அதிகரித்துள்ள நிலையில், 2013 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி சார்பாக சூதாட்டம் நடத்தப்பட்ட புகாரில் நான்கு ஆண்டுகள் ஐபிஎல் போட்டியிலிருந்து இந்த அணி நீக்கப்பட்டது.

Also Read: நடிப்பு, இயக்கம் இரண்டையும் கைவிடப் போகும் இயக்குனர்.. அனிருத்துக்கே டஃப் கொடுக்கும் திட்டம்

இதனிடையே 2018 ஆம் ஆண்டு காம்பேக் கொடுத்த இந்த அணிக்கு, புதிதாக காம்பேக் தீம் சாங் கம்போஸ் பண்ணுமாறு அணியின் குழுவினர், அனிரூத்திடம் ஒரு கோடி வரை சம்பளமாக கொடுத்துள்ளனர். ஆனால் தன்னால் சிஎஸ்கே அணிக்கு தீம் சாங் பண்ணமுடியாது என கூறிய அனிரூத், அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். அதாவது தீவிர தோனியின் ரசிகனான தனக்கே ஏற்கனவே வந்த விசில் போடு பாடல் பிடித்தது என்றும் அதற்கு நிகராக தன்னால் மற்றொரு தீம் சாங் ரெடி பண்ண முடியாது என கூறினாராம்.

மேலும் தனக்கு கொடுத்த ஒரு கோடி ரூபாய் பணத்தையும் திருப்பிக்கொடுத்து விட்டதாக அவரே ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். தற்போது அனிரூத் மின்னல் வேகத்தில் பல படங்களில் கமிட்டாகி வரும் நிலையில், இந்திய அளவில் பிரபலமாகும் வாய்ப்பு கிடைத்தும், விசில் போடு பாடலுக்கு மரியாதை கொடுத்து வேறு தீம் சாங்கை கம்போஸ் பண்ணாமல் விட்டது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.

Also Read: அனிருத்தை ஓரம்கட்ட வரும் ஜிவி பிரகாஷ்.. அடுத்தடுத்த படவாய்ப்பால் எடுத்த முக்கிய முடிவு

Trending News