ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பெரிய தலைகளின் பேச்சை கேட்டு ஆடும் அனிருத்.. நண்பனையே கழட்டிவிட்ட சம்பவம்

Aniruth: அனிருத் இப்போது தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் அனிருத் இசையமைத்த பாடல்கள் எல்லாமே பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அடுத்ததாக அவரது இசையில் லியோ படம் வர இருக்கிறது.

இது தவிர இந்தியன் 2 போன்ற பெரிய பட்ஜெட் படங்களும் அனிருத் லைன் அப்பில் இருக்கிறது. இவ்வாறு நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு அனிருத் வேலை செய்தாலும் தனது நண்பனிடம் கால்ஷீட் இல்லை என்று சொல்லி நிராகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்குப் பின்னால் பெரிய தலைகளின் பேச்சை கேட்டு தான் அனிருத் இவ்வாறு ஆடுகிறாறோ என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது.

Also read: லியோ, தலைவர் 171-க்கு நடுவில் சம்பவம் செய்ய போகும் லோகேஷ்.. கூட்டணி போடும் அனிருத்

அதாவது சிம்பு படம் என்று எடுத்துக் கொண்டாலே யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத் தான் இசை அமைப்பார்கள். அந்த வகையில் கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்குகிறார்.

மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் கேட்டிருக்கிறார். சிம்பு படம் என்றால் தனது நண்பனுக்காக கண்டிப்பாக அனிருத் ஒத்துக் கொள்வார் என எதிர்பார்த்த நிலையில் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. அதாவது அனிருத் நான் ரொம்ப பிசி, ஆறு மாதம் கழித்து தான் பாடல்கள் கிடைக்கும் என்று குறிப்பிட்டாராம்.

Also read: காவாலாயாவுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது.. அனிருத்தை திக்குமுக்காட செய்த கலாநிதி

இவ்வாறு சொன்னதால் அதிருப்தி அடைந்த இயக்குனர் சிம்பு உயிர் நண்பனாக இருந்தும் ஏன் அனிருத் இதை செய்யவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் ரஜினி அல்லது தனுஷ் போன்றோரின் வேலையாகத்தான் இது இருக்கும் என்று இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சிம்பு இப்போது தான் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ள நிலையில் அவரது கேரியருக்கு முட்டுக்கட்டை போட கூட இவ்வாறு சூழ்ச்சி நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கமல் படமாக இருந்தும் அனிருத் வேண்டாம் என்று எப்படி சொல்லி உள்ளார் என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயமாக தான் இருக்கிறது.

Also read: மணிரத்தினத்திடம் எடுபடாமல் போன சிம்புவின் சில்மிஷங்கள்.. பாம்பு புற்றிலே மகுடி வாசிச்சாலும் வேலைக்காகல

Trending News