திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஏ ஆர் ரகுமானுக்கு ஒரு மாதிரி பயத்தை காட்டிய அனிருத்.. சூழ்நிலை சரியில்லை என அதிரடியாக எடுத்த முடிவு

இசைப்புயல் என கொண்டாடப்பட்டு வரும் ஏ ஆர் ரகுமான் தமிழை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என தனி முத்திரை பதித்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் இவர் தான் முக்கியமானவர். அந்த அளவுக்கு இவர் பல மொழிகளிலும் படு பிஸியாக இருக்கிறார். அதிலும் இப்போது இவர் ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களில் தான் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இன்னும் இரண்டு வருடங்களுக்கு இவருடைய கால் சூட் நிரம்பி வழிகிறது. ஆனாலும் தமிழ் மொழியை விட்டுக் கொடுக்காமல் பத்து தல, லால் சலாம், அயலான், பொன்னியின் செல்வன் 2 ஆகிய திரைப்படங்களையும் இவர் கைவசம் வைத்திருக்கிறார். அதில் சிம்புவின் பத்து தல திரைப்படம் இந்த மாதம் வெளிவர இருக்கிறது. அதனால் ஏ ஆர் ரகுமான் மிகவும் பொறுப்பாக அந்த வேலையை கவனித்து வருகிறாராம்.

Also read: கமல் ஹீரோயிசம் காட்டாத 6 படங்கள் .. உண்மையிலே இவர் பைத்தியமா என யோசிக்க வைத்த மூன்று படங்கள்

இதற்கு முக்கிய காரணம் தற்போது தமிழ் சினிமாவில் இவருக்கு போட்டியாக அனிருத் சத்தம் இல்லாமல் வளர்ந்து வருவது தான். இளம் வயதிலேயே தன் திறமையால் அனைவரையும் வியக்க வைத்த இவர் தற்போது டாப் ஹீரோக்களின் சாய்ஸாக இருக்கிறார். அந்த வகையில் இப்போது இவரின் கைவசம் லியோ, ஜெயிலர், இந்தியன் 2, தலைவர் 170 ஆகிய திரைப்படங்கள் இருக்கிறது.

இது இல்லாமல் தெலுங்கிலும் இவர் ரொம்ப பிசியாக இருக்கிறார். மேலும் தற்போது ஷங்கர் உள்ளிட்ட பல இயக்குனர்களும் இவர்தான் வேண்டும் என்று தேடி வருகிறார்களாம். அந்த அளவிற்கு அனிருத் தன் திறமையால் வளர்ந்து இருக்கிறார். இதுதான் தற்போது ஏ ஆர் ரகுமானுக்கு ஒரு மாதிரியான பயத்தை காட்டி இருக்கிறது. ஏனென்றால் கோலிவுட்டில் ஏ ஆர் ரகுமானை அசைக்க யாரும் கிடையாது என்ற அளவுக்கு அவர் கொண்டாடப்பட்டு வருகிறார்.

Also read: மதங்களைக் கடந்து மனிதத்தை கொண்டாடிய அயோத்தி.. 10 வருட போரட்டத்திற்கு பின் சசிகுமார் ஜெயித்தாரா?

ஆனால் இப்போது மற்ற மொழிகளிலும் அவர் கவனம் செலுத்தி வருவதால் முன்பு போல் தமிழில் அவரால் அதிக ஆர்வம் காட்ட முடிவதில்லை. அதனாலேயே அவருக்கான வாய்ப்புகளும் குறைந்து கொண்டு வருகிறது. இதை உணர்ந்து கொண்ட ஏ ஆர் ரகுமான் இனிமேல் வருடத்தில் நான்கு, ஐந்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம்.

மேலும் தன்னை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு அனிருத் வளர்ந்து வருவதையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே தற்போது அவர் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறாராம். தற்போது அவர் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் 2 உட்பட சில திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கிறது. இதன் மூலம் அவர் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

Also read: ரஜினிக்காக எழுதிய கதையில் நடிக்கும் வாரிசு நடிகர்.. பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள ராஜ்கமல் நிறுவனம்

Trending News