திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பல வருட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிருத்-சிம்பு கூட்டணி.. கோடம்பாக்கத்தை பரபரப்பாகிய அப்டேட்

சிம்பு என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த அளவிற்கு சிம்புவின் பெயரை வைத்து ஏகப்பட்ட பிரச்சனைகள் கிளம்பும். அதிலும் கடந்த 2015 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் அனிருத் இசையில் சிம்பு பெண்களை குறித்து பாடிய பீப் சாங் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அந்த சமயத்தில் பெண்கள் அமைப்புகள் ஒன்று திரண்டு சிம்புவுக்கு எதிராக போர் கொடி தூக்கினர். இதைத்தொடர்ந்து பீப் சாங் பாடிய சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு விசாரணை செய்யப்பட்டது.

Also Read: அக்கடதேசத்தில் துரத்தி விடப்பட்ட இயக்குனர்.. சிம்பு ரிஜெக்ட் செய்த கதையில் சிக்கிய சிவகார்த்திகேயன்

இந்த பிரச்சனை நடந்து முடிந்து 8 வருடங்களை கடந்த நிலையிலும் சிம்பு, அனிருத் இருவரும் இணைந்து இதுவரை ஒரு படத்தில் கூட பணி புரியவில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகி இருக்கும் அப்டேட் கோடம்பாக்கத்தை  பரபரப்பாகியது.

ஏனென்றால் கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் அனிருத் இசையமைக்கப் போகிறார் என்ற தகவல் வந்துள்ளது. அனிருத் எப்பொழுது சிம்புவுடன் இணைவார் என்று ரொம்ப நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்தது விரைவில் நடக்க உள்ளது. அனிருத்-சிம்பு இருவருமே நல்ல நண்பர்கள். ஆனால் இதுவரை படங்கள் ஏதும் பண்ணவில்லை.

Also Read: சூர்யா பட நடிகையை எல்லை மீறி தடவிய நபர்.. கோபத்தில் கொந்தளித்த சிம்பு பட நடிகை

காரணம் இருவரும் இணைந்து ஒரு ஆல்பம் சாங் போட்டதன் விளைவு. அது பெண்களை தவறாக சொல்லியதால் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியது. இதனால் இந்த இருவருமே  விளையாட்டாக செய்த ஒரு பாட்டை பிரச்சினையாக மாறியதால், இதுவரை இதுவரும் இணைந்து படம் பண்ணாமல் இருந்து வந்தனர்.

இந்த படத்தின் மூலம் இருவரும் சேர்வதால் புது கூட்டணி அமையும். நிச்சயம் இந்த படத்தில் இருக்கும் பாடல்களும் தாறுமாறாக இருக்கப் போகிறது என ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர். இதன் பிறகும் மீண்டும் மீண்டும் இவர்கள் இணையும் வாய்ப்புகள் உருவாக்கப் போகிறது.

Also Read: சூர்யா பட நடிகையை எல்லை மீறி தடவிய நபர்.. கோபத்தில் கொந்தளித்த சிம்பு பட நடிகை

Trending News