அனிருத் இன்று மோஸ்ட் வான்டெட் இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். 33 வயதிலேயே பல மகத்தான சாதனைகளை செய்து இசையமைப்பாளர்கள் மத்தியில் தன்னை ஆலமரம் போல் நிலை நிறுத்தி உள்ளார்.
தற்சமயம் அனிருத் கையில் 12 படங்கள் இருக்கிறது. அவை எல்லாமே பெரிய பட்ஜெட் படங்கள். 2012 ஆம் ஆண்டு “why this kolaveri” பாடலில் இருந்து அவருக்கு அடித்தது ஜாக்பாட். அதன்பின் நண்பர் தனுஷ் உடன் சேர்ந்து கொடிகட்டி பறந்தார்.
இப்பொழுது தளபதி 69, கூலி, விடாமுயற்சி, இந்தியன் 3 என 12 பெரிய பட்ஜெட் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். அவர் 15 இல் இருந்து 20 கோடிகள் வரை சம்பளம் வாங்கி வருகிறார். இந்தியன் 2 படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் 15 கோடிகள். இப்பொழுது ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ஜெய்லர் 2 படத்திற்கு 17 கோடிகள் கேட்கிறாராம்.
அனிருத் சின்ன பட்ஜெட் படங்களை மதிப்பதே இல்லை. சமீபத்தில் நடிகர் கவின் நடித்துக் கொண்டிருக்கும் “கிஸ்” படத்துக்கு இவர் தான் இசை அமைப்பதாக இருந்தது. ஆனால் இவரை பட குழுவினர் நீக்கி விட்டார்கள் என பேச்சுக்கள் அடிபட்டு வந்தது.
கிஸ் படத்திலிருந்து அனிருத் தான் விலகியுள்ளார். அவர்தான் எனக்கு சின்ன பட்ஜெட் படம் வேண்டாம் என ஒதுங்கி விட்டாராம். அவர் எதிர்பார்க்கும் சம்பளம் 15 கோடிகள். ஆனால் படத்திற்கு பட்ஜெட்டே 20கோடிகள் தான். இதனால் நண்பன் கவின் படம் என்று கூட பாராமல் கருவேப்பிலை கொத்தமல்லி போல் கில்லிஎறிந்து விட்டார்.