Indian 2- Anirudh: இந்தா வருது அந்தா வருதுன்னு கடந்த ஏழு வருடங்களாக பெருத்த அலப்பறையை கொடுத்து அதிக எதிர்பார்ப்பை கூட்டியது இந்தியன் 2. அந்த வகையில் இன்றைய நாள் தான் பிறந்த விடிவு காலம் என்பதற்கு ஏற்ப உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று ரிலீஸ் ஆகிவிட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படம் மக்களை திருப்திப்படுத்தியதா என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
28 வருடங்களுக்கு முன் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ரசிகர்களை கவர்ந்து பட்டி தொட்டி எல்லாம் பறந்து ஒரு விழிப்புணர்வு படமாக சாதனை படைத்து இப்பொழுது வரை பேசும் அளவிற்கு இடம் பிடித்திருக்கிறது. ஆனால் இதில் கால் வாசி கூட இந்தியன் 2 படம் இல்லை என்பது தான் மக்களின் மிகப்பெரிய ஆதங்கமாக இருக்கிறது.
சைலன்டாக இருக்கும் அனிருத்
அதிலும் இது சங்கர் இயக்கிய படம் தானா என்ற சந்தேகம் கூட வந்துவிட்டது. அந்த அளவிற்கு இந்தியன் 2 படத்தின் காட்சிகளும், கமலின் கதாபாத்திரமும் ஒத்தே போகாமல் ஏதோ கடமைக்கு படத்தை முடிக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப இருந்ததாக மக்கள் விமர்சனம் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எப்போதுமே மறக்க முடியாத அளவிற்கு பொக்கிஷமாக இருந்தது ஏஆர் ரகுமானின் பச்சை கிளிகள் தோளோடு, டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா, கப்பலேறி போயாச்சு சுத்தமான ஊராச்சு, ஆகாடானு நாங்க, மாயா மச்சந்திரா போன்ற ஒவ்வொரு பாடல்களுமே முத்து முத்தாக விழுந்து நம்மளை சொர்க்கத்திற்கு கூட்டிட்டு போகிற ஒரு உணர்வை ஏற்படுத்தியது.
ஆனால் இந்தியன் 2 படத்தில் என்னதான் ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தாலும் மக்களை கவரும் வகையில் எந்த பாடலும் அமையவில்லை. அதனால் தான் என்னமோ அனிருத், இந்தியன் 2 படத்தின் விமர்சனங்களை பார்த்ததும் இருக்கும் இடம் தெரியாமல் சைலண்டாக இருக்கிறாரோ என்னமோ. எப்போதுமே அனிருத் எல்லா படத்திற்கும் முந்திரி கோட்டை மாதிரி முந்திக்கிட்டு விமர்சனங்களை வாரி இறைப்பார்.
ஆனால் அப்படிப்பட்டவர் இந்தியன் 2 படத்திற்கு இப்பொழுது வரை எந்தவித விமர்சனத்தையும் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவருக்கே தெரிந்து போய் விட்டது இந்தியன் 2 படத்தில் அவர் பங்குக்கு அவர் சொதப்பி இருக்கிறார் என்று. ஆக மொத்தத்தில் கையில் கிடைத்த ஒரு பொக்கிஷத்தை மொத்த பேரும் சேர்ந்து பாலாக்கி இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிந்து விட்டது.
கமலின் இந்தியன் 2 படத்தின் விமர்சனம்
- 28 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் இணையும் ஹீரோயின்
- Indian 2: கமலையே பயமுறுத்தும் அக்கடதேச ஹீரோ
- மும்பையில் ஷங்கர் நடத்திய ரகசிய மீட்டிங்