செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

திரும்பத் திரும்ப விஜய்யை வெறுப்பேத்த அனிருத் செய்த மட்டமான காரியம்.. காசு கொடுக்கிற முதலாளிக்கே ஆப்பா!

Actor Vijay: ஏற்கனவே எங்கு திரும்பினாலும் இவரா இல்ல அவரா என விஜய் -ரஜினி பற்றிய பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் புது பிரச்சனை ஒன்று முளைத்து உள்ளது. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாய், விஜய்யை வெறுப்பேத்தி வரும் பிரபலம் குறித்த தகவலை பற்றி இங்கு காண்போம்.

தமிழ் சினிமாவில் பரவலாய் பேசப்பட்டு வரும் தலைப்பு தான் சூப்பர் ஸ்டார் பிரச்சனை. இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் விதமாய் தற்போது புது பிரச்சனை ஒன்றை கிளப்பி வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். விஜய் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ இவரின் பாடல்கள் கண்டிப்பாக இடம்பெற்று விடும்.

Also Read: கேப்டனுக்கு மகனாக நடிக்க விஜய் வாங்கிய சம்பளம்.. இப்ப 120 கோடி என்பது அசுர வளர்ச்சி தான்

அந்த அளவிற்கு தொடர்ந்து விஜய் படங்களில் இசையமைத்து தன் மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார் என்றே கூறலாம். அவ்வாறு தன் படங்களின் மூலம் நம்பி வாய்ப்பு கொடுத்து வெற்றியடைய செய்தவர் நடிகர் விஜய். தற்பொழுது லோகேஷ் இயக்கத்தில் உருவாக்கி உள்ள லியோ படத்திலும் அனிருத் தான் இசையமைத்திருக்கிறார்.

மேலும் லியோ பட பாடலுக்கு இசையமைக்க 10 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. அவ்வாறு மார்க்கெட்டை உயர்த்தி விட்டவருக்கு ஆப்பு அடிக்கும் விதமாய் தற்பொழுது ஜெயிலர் படத்தில் இவரின் பாடல்கள் இருப்பதாகவும் விஜய் ரசிகர்கள் வேதனையை தெரிவித்து வருகிறார்கள்.

Also Read: Jailer Movie Review – பதுங்கி இருந்து பாய்ந்த புலி.. தலைவர் அலப்பறை எப்படி இருக்கு? ஜெயிலர் முழு விமர்சனம்

இவ்வளவு வஞ்சம் வைத்துக் கொண்டு ஏன் விஜய் படத்தில் இசை அமைக்க வேண்டும் என இருக்கும் பிரச்சனையை பெரிதாக ஓதிக் கொண்டு வருகின்றனர். அதுவும், தான் செல்லும் அனைத்தும் நிகழ்ச்சிகளுக்கும் ஜெயிலர் படத்தின் பாடல்களை பாடி பாடி வெறுப்பேற்றி வருகிறாராம்.

இவரின் இத்தகைய நடவடிக்கை பிடிக்காது இவ்வளவு வஞ்சகம் வைத்துக் கொண்டு விஜய் படத்தை ஏற்க தேவையில்லை என்று கூறும் அளவிற்கு விஜய்யின் ரசிகர்கள் கொந்தளிப்பில் காணப்பட்டு வருகின்றனர். மேலும் இவர் செய்யும் அட்டூழியங்களை பொறுக்க முடியாது, காசு கொடுக்கிற முதலாளிக்கே ஆப்பு வைத்து வருகிறார் அனிருத் எனவும் கூறி வருகின்றனர்.

Also Read: ஜெயிலர் விமர்சனத்திற்கு தயாரான ப்ளூ சட்டை.. ஒத்த வரியில் கொடுத்த கமெண்ட், நெல்சா மண்ட பத்திரம்

Trending News