ஒரு படம் என்பது நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படி இருக்கும் பொழுது அந்த வாய்ப்பை மிஸ் பண்ணியவர்களுக்கு தான் அதனுடைய இழப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். அப்படி தனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு வாய்ப்பு நடிகை சமந்தாவுக்கு கை மாறி போய், அதன் மூலம் அவர் மிகப்பெரிய ஹீரோயின் ஆகி இருக்கிறார் என்பதை நினைத்து ஒரு நடிகை புலம்பி இருக்கிறார்.
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயின் ஆக இருக்கிறார். தமிழில் இவர் முதன் முதலில் மாஸ்கோவின் காவேரி என்னும் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை. பின்னர் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷனில் ஹீரோயினாக நடித்துவிட்டு பின் தமிழுக்கு பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.
விண்ணைத்தாண்டி வருவாயா தமிழ் வெர்ஷனில் சமந்தா, நடிகர் சிம்பு இயக்குனராக மாறிய பின்பு அவருக்கு உதவி இயக்குனராக நடித்திருப்பார். மேலும் ஒரு காட்சியில் சிம்புவை காதலிப்பதாக கூட சொல்லி இருப்பார். பின்னர் வெளிநாட்டில் நடக்கும் சூட்டிங் சீன்களிலும் கதாநாயகி கேரக்டரில் நடிப்பது போல் காட்டப்பட்டிருக்கும். தற்போது சமந்தாவுக்கு இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை ஐயர் நடிகை அழுது புலம்பி சொல்லி இருக்கிறார்.
முதன் முதலில் இந்த கேரக்டரில் நடித்தது நடிகை ஜனனி ஐயர் தானாம் . கிட்டத்தட்ட மூன்று நாட்கள் படப்பிடிப்பும் நடந்த பிறகு ஜனனியிடம் எந்த காரணமும் சொல்லாமல் அவரை நீக்கி விட்டு நடிகை சமந்தாவை அந்த கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இது ஜனனிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தாலும் இந்த சின்ன கேரக்டரில் நடிக்காததால் நான் முதலிலேயே அவன் இவன் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமாகி இருக்கிறேன் என்று அவரை அவரே தேற்றிக் கொண்டிருக்கிறார்.
ஒருவேளை ஜனனி அந்த கேரக்டரில் நடித்திருந்தால் தெலுங்கிலும் சமந்தாவின் கதாநாயகி ரோலை பண்ணி இருக்க வாய்ப்புகள் அதிகம் . அதன் பின்னர் தமிழ் அல்லது தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயின் ஆக கூட ஆகியிருக்கலாம். இந்த ஒரு சின்ன கேரக்டரை மிஸ் பண்ணியதால் அவருடைய சினிமா கேரியர் கொஞ்சம் பின் தங்கி விட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அவன் இவன், தெகிடி போன்ற படங்களில் நடித்த ஜனனி ஐயர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. சமூக வலைத்தளத்தில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் ஐயர் என்ற அடையாளம் தனக்கு வேண்டாம் எனவும் இனி ஜனனி என்ற பெயரில் தான் படங்கள் நடிப்பேன் எனவும் சொல்லி இருந்தார். ஆனால் அதன் பின்னரும் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.