வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

மலையாளத்தில் மிரள விட்ட அஞ்சாம் பத்திரா.. தமிழ் ரீ-மேக்கில் நடிக்கப் போகும் பிட்டானா வாரிசு நடிகர்!

கடந்த ஆண்டு மலையாள திரையுலகை மிரளவிட்ட படம் அஞ்சாம் பத்திரா. கில்லர் சைக்கோ கதையான இப்படம் ராட்சசன் சைக்கோ போன்ற படங்களின் வெற்றியை அடுத்து இயக்கப்பட்ட ஒரு அழகிய சித்திரம்.

படத்தின் ஒவ்வொரு அசைவும் இயக்குனர் மிதுன் இஞ்ச் இஞ்சாக செதுக்கி இருப்பார். இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது குறிப்பிடத்தக்கது.

பாணா காத்தாடி, ஈட்டி படத்தின் நாயகன் அதர்வா இப்படத்தின் ஹீரோவாக இருக்கலாம் எனவும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் விரைவில் பேச்சுவார்த்தை மற்ற விடயங்களை பற்றி பேசப்போகிறாராம்.

அதர்வாவின் நடிப்பு உடல்வாகு என எல்லாவற்றையும் சரிபார்த்த பிறகே இயக்குனர் அதர்வாவையே அக்கதைக்குள் கொண்டு சென்று விட்டாராம்.

முரளி ரசிகர்களை தாண்டி தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் அதர்வா. ஆனாலும் கூட கோலிவுட் வட்டாரத்தில் ஒரு அங்கீகாரம் கிடைப்பதற்கு கொஞ்சம் போராடி தான் வருகிறார்.

இந்த படத்தில் நடித்தால் கண்டிப்பாக இவரின் மார்க்கெட் எகிறி விடும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

anjaam-pathiraa-1
anjaam-pathiraa-1

Trending News