வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அஞ்சலியைக் கெடுத்ததே ஜெய் தான்.. ரத்தக்கண்ணீர் விடும் தயாரிப்பாளர்

நடிகை அஞ்சலி மற்றும் ஜெய் ஆகிய இருவரும் ஒரு காலகட்டத்தில் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கள் பல பத்திரிகைகளில் வெளியானது. வெளியில் நண்பர்கள்தான் என்று சொல்லிக்கொண்டாலும் இருவரும் தனிமையில் சுற்றிய புகைப்படங்கள் வெளியானது.

அது மட்டுமில்லாமல் இருவரும் இணைந்து நடிக்கும் படங்களில் இருவரும் ஒரே ஹோட்டல் அறையில் தங்குவது, வெளியில் செல்வது போன்றவற்றை படக்குழுவினர் பலர் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.

சமீபகாலமாக இருவருக்குள்ளும் உள்ள காதல் முறிந்து விட்டதாக கூறுகின்றனர். ஜெய் போன் செய்தால் கூட அஞ்சலி எடுப்பதில்லையாம். அஞ்சலி ஜெய் மீது வைத்திருந்த நம்பிக்கை குறைந்து விட்டதாகவும் அவர்களது நண்பர்கள் வட்டாரங்களில் கூறி வருத்தப்பட்டாராம்.

இந்நிலையில் அஞ்சலி மற்றும் ஜெய் ஆகிய இருவரையும் வைத்து பலூன் என்ற படத்தை எடுத்த தயாரிப்பாளர் ஒழுங்காக இருந்த அஞ்சலியை கெடுத்ததே ஜெய் தான் என்றும், இருவரும் சேர்ந்து கொண்டு ஊர் சுற்றுவது என்னுடைய காசில்தான் எனவும் வருத்தப்பட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் அஞ்சலியை பெயர் சொல்லிக் கூப்பிட கூடாது எனவும், மேடம் கூப்பிடுங்க எனவும் டார்ச்சல் செய்ததாக ஜெய் மீது அடுக்கடுக்கான புகார்களை வைத்துள்ளார்.

ஜெய்க்கு ஏற்கனவே நான்தான் அடுத்த விஜய் என்ற கனவில் இருந்ததாக பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியான நிலையில், தற்போதும் தான் ஒரு பெரிய ஹீரோ என்பதை மெயின்டெய்ன் செய்ய பயங்கர பந்தா காட்டி வருகிறார் எனவும் தொடர்ந்து அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

jai-anjali-cinemapettai
jai-anjali-cinemapettai

Trending News