தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்திற்கு தொடர்ந்து பல்வேறு விதமான பிரச்சனைகள் எழுந்தது. இதனால் முன்னணி நடிகர்கள் பலரும் ஒரு அணியாகவும், இளம் நடிகர்கள் ஒரு அணியாகவும் பிரிந்து பல்வேறு விதமான முட்டல் மோதல்களை சந்தித்தனர்.
ஒரு காலத்தில் இந்த சண்டைகள் தான் சுவாரஸ்யமாக சென்றது என ரசிகர்கள் பலரும் கூறினர். ஒருமுறை விஷால் கூட நியாயம், நீதி, நேர்மை வென்றது எனக்கூறி தனது வெற்றியை அனைவரும் முன்னிலையில் தெரிவித்தார். இதற்கு சரத்குமார் மற்றும் ராதாரவி தரப்பினர் சில நேரங்களில் உண்மையை விட பொய் தான் அதிகமாக ஜெயிக்கும் என அதற்கு பதிலடி கொடுத்தனர்.
நமக்கு தெரிந்த வரைநடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் இதுவரை ஆண்கள் மட்டும் தான் தலைவராகப் பொறுப்பேற்று உள்ளனர் என இத்தனை நாள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் பிரபல நடிகை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தலைவியாக பொறுப்பேற்றுள்ளார்.
மகாத்மா உதங்கர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஞ்சலிதேவி. அதன்பிறகு இவர் ஆதித்தன் கனவு, பொன்வயல், மாயாவதி மற்றும் மர்மயோகி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் காதல் பரிசு. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த ஒரே பெண் நடிகை அஞ்சலிதேவி. இன்று வரைக்கும் எந்த ஒரு நடிகையும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தலைவராக பொறுப்பேற்கவில்லை.
அதன்பிறகுதான் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நாசர் தலைவராக பொறுப்பேற்றார்.பல நடிகர்கள் போட்டி போட்ட நிலையில் அப்போது முன்னணி நடிகர்கள் தான் பெருவாரியாக களத்தில் இறங்கியதால் நாசர் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றார். தற்போது கூட நாசர் தான் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.