சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

அஞ்சலியுடன் ஏற்பட்ட காதல் முறிவு.. புது ஜோடியை தட்டித் தூக்கிய ஜெய்.!

இயக்குனர் களஞ்சியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் நடிகை அஞ்சலி. சில மாதங்களாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். எங்கேயும் எப்போதும் படத்திற்கு பின்னர் ஜெய்யுடன் நடிக்கும் போது காதல் வயப்பட்டு உள்ளார் அஞ்சலி. இருவரும் நெருக்கமாக இருந்ததால் கோலிவுட் வட்டாரமே அவர்களை பற்றி பேசிக் கொண்டிருந்தது.

அதாவது திருமணம் ஆகாமலேயே லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தனர். ஆனால் ஏதோ ஒரு பிரச்சனையால் விரிசல் ஏற்பட்டு விட்டது. அதற்குப்பின் நாடோடிகள் 2 படத்தில் சமுத்திரக்கனி உடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளதால் அஞ்சலி அவரை குருவாக ஏற்றுக் கொண்டாராம்.

அதாவது அஞ்சலி சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் சமுத்திரக்கனி தான் பார்த்துக் கொள்வாராம். இது ஒருபுறமிருக்க வெப் சீரியலில் அறிமுகமான ஜெய், வாணிபோஜன் உடன் எற்பட்ட கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டானது.

இதனால் தற்போது வாணி போஜன், ஜெய்யும் நெருக்கமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர். படத்தில் நடிக்கும் நெருக்கமான காட்சிகளை வைத்து நிஜ வாழ்க்கையிலும் அது உண்மை என்று நம்பி விடுகின்றனர்.

இதனால் காதல் வயப்பட்டு இதுபோன்ற சிக்கலில் சிக்கி விடுகின்றனர். எப்படி ஜெய், அஞ்சலிக்கும் இருந்த காதல் முறிவு ஏற்பட்டு தனித்தனியாக தங்கள் ஜோடிக்களுடன் சுற்றி வருவதாக பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

jai-anjali
jai-anjali

Trending News