வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

என்ன அஞ்சலி, உங்க நிலைமை இப்படி ஆகிடுச்சு.. கவலையில் ரசிகர்கள்

கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி அங்காடித்தெரு படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஞ்சலி. அதன்பிறகு எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் இளம் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்தார். இன்னேரம் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வர வேண்டியவர். இன்னமும் தனக்கென ஒரு இடம் கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.

அதில் அவருடைய சித்தி பிரச்சனை சினிமா வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது. இருந்தாலும் தற்போது ஷங்கர் படம் போன்ற முக்கிய சில படங்களில் பட வாய்ப்புகளை கைவசம் வைத்து இருப்பதால் இன்னும் சில வருடங்களில் மீண்டும் தன்னுடைய பழைய இடத்தைப் பிடித்துவிடுவார் என்கிறது சினிமா வட்டாரம். ஆனால் அதற்குள் அவர் எடுத்த முடிவுதான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளுக்கு தூண்டில் போடுவார் என்று பார்த்தால் திடீரென காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஒருவருடன் ஜோடியாக படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்தனைக்கும் தற்போது தான் ஷங்கர், ராம்சரன் இணையும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கையில் விஜய், அஜீத் என டாப் நடிகர்களின் பட்டியலை லிஸ்ட் போடுவார் என்று பார்த்தால் திடீரென காமெடி நடிகரின் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளது புரியாத புதிராகவே உள்ளது. ஒருவேளை நயன்தாராவுக்கு கோலமாவு கோகிலா என்ற படம் அமைந்தது போல் தனக்கும் ஒரு படம் அமைந்துவிடும் என எதிர்பார்த்து இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார் என்பதும் தெரியவில்லை.

anjali-cinemapettai
anjali-cinemapettai

அதுவும் நம்ம ஊர் படம் என்றால் பரவாயில்லை. தெலுங்கில் காமெடி நடிகராக வலம் வரும் ஒருவருடன் சேர்ந்து நடித்தால் அந்த படம் தமிழில் எப்படி வியாபாரம் ஆகும் என்ற ஒரு கருத்தும் உள்ளது. இது எப்படியோ இவ்வளவு படம் நடித்த இவருக்கு தெரியாதா எப்படி முன்னுக்கு வரவேண்டுமென்று. எப்படியெல்லாம் முன்னுக்கு வருகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Trending News