செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

50-வது படத்துக்காக மெனக்கெட்ட அஞ்சலி.. பல பேரிடம் கைமாறிய ஸ்கிரிப்ட்

Actress Anjali: நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்று பெயர் வாங்கிய அஞ்சலி அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் உட்பட பல படங்களில் தன் திறமையை நிரூபித்து இருக்கிறார். ஆனால் இடையில் காதல் தோல்வி, குடும்ப பிரச்சினை போன்ற பல சிக்கல்களால் அவர் நடிப்பில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்தார்.

அது மட்டுமல்லாமல் தெலுங்கில் அதிக படங்களில் நடிக்க ஆரம்பித்தது மட்டுமல்லாமல் கிளாமர் குயினாகவும் மாறினார். அங்கு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து கல்லா கட்டியவர் ஒரு பாடலுக்கும் குத்தாட்டம் போட்டு வந்தார். இருப்பினும் தமிழை பொறுத்தவரை அவர் கனமான கதாபாத்திரங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

Also read: 37 வயதில் அஞ்சலியின் மொத்த சொத்து மதிப்பு.. அந்த ஒரு விஷயத்திற்கு மட்டும் பல லட்சம் செலவு செய்வாராம்

அந்த வகையில் அவர் இப்போது சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் பக்கம் திரும்பி உள்ளார். அதுவும் தன்னுடைய 50 வது படத்தின் மூலம் அவர் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது.

அதாவது ஈகை என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அசோக் வேலாயுதம் இயக்குகிறார். ஆரம்பத்தில் இந்த கதையை அவர் அஞ்சலியிடம் கூறிய போது அவர் ரொம்பவும் உற்சாகமாகி விட்டாராம். அந்த அளவுக்கு இப்ப படத்தின் கதை அவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. அதனால் உடனே ஷூட்டிங் ஆரம்பிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.

Also read: 17 வருட திரை பயணம்.. மிரட்டும் அஞ்சலியின் 50-வது பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

ஆனால் திடீரென தயாரிப்பு தரப்பு விலகிக் கொண்டதால் வேறு ஒரு நிறுவனத்திற்கு இயக்குனர் கதை சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். ஆனால் அப்போதும் கூட தயாரிப்பாளர் கிடைப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அஞ்சலி தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி தயாரிப்பாளர் கிடைப்பதற்கு வழிவகை செய்திருக்கிறார்.

அந்த அளவுக்கு இந்த படத்தின் மேல் அவருக்கு அதிக நம்பிக்கை இருந்ததாம். அதன் காரணமாகவே தன்னுடைய ஐம்பதாவது படத்திற்காக அவர் இவ்வளவு தூரம் மெனக்கெட்டு நடித்து வருகிறார். இதன் மூலம் மீண்டும் தமிழில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும் அவர் பிளான் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: தவறான உறவில் இருந்தேன்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அங்காடி தெரு அஞ்சலி

Trending News