புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நடுரோட்டில் அவரோட படுக்க சொன்னாங்க.. பகீர் கிளப்பிய அங்காடித் தெரு அஞ்சலி

Actress Anjali: நடிக்கிற படத்துல மட்டும் அல்ல, நிஜ வாழ்க்கையிலும் செம போல்ட் ஆக இருக்கக்கூடிய நடிகை தான் அஞ்சலி. இவர் நடித்த படத்தில் அவரை நடு ரோட்டில் படுத்தே ஆகணும்னு வலுக்கட்டாயப் படுத்தினார்களாம். தமிழ் சினிமாவில் அஞ்சலி நடிகர் ஜெய்யின் காதல் வலையில் விழுந்து சில வருடம் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

ஆனால் ஓவர் குடிப்பழக்கம் உடைய ஜெய் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என சுத்தமாகவே எண்ணம் இல்லாமல் இருந்தார். இவருடன் இருந்தால் நம்முடைய வாழ்க்கையும் நாசமாகிவிடும் என்ற எண்ணத்தில் அவரை அஞ்சலி கழட்டி விட்டார்.

பின்பு சில வருடம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அஞ்சலி இப்போது மறுபடியும் தனது செகண்ட் இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். முன்பை விட படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் அஞ்சலி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு பெயர் கிடைத்த அங்காடி தெரு படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டார்.

அதில் கிளைமாக்ஸ் காட்சியில் சாலையில் படுத்திருக்கும் நபர்களுடன் சேர்ந்து படுக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். என்னால் அப்படி முடியாது, செட்டு போடுங்க அதில் வேண்டுமானால் படுக்கிறேன் என்று சொல்லிப் பார்த்தேன். ஆனால் இயக்குனர் விடுவதாக இல்லை.

கதைக்கு திருப்புமுனையாக இந்த காட்சி இருக்கும், செட் அமைத்து செய்தால் தத்ரூபமாக இருக்காது என்று சொல்லி அந்த படத்தின் ஹீரோவுடன் நடு ரோட்டில் படுக்கும்படி இயக்குனர் வற்புறுத்தியதால்தான் அந்த காட்சியில் நடித்ததாக அஞ்சலி கூறியுள்ளார்.

அங்காடித் தெரு படத்தில் அஞ்சலியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அந்த படத்தில் நடுரோட்டில் படுப்பதற்கு தயக்கம் கொண்டதை நினைத்து அஞ்சலி இப்போது வெட்கப்படுகிறார். ஒரு நடிகையாக ஒரு சில தியாகங்களை செய்ய வேண்டும் என்பதை அவர் பின்பு தான் புரிந்து கொண்டார்.

Trending News