வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஞ்சலியை மோசமாய் சித்திரவதை செய்த சொந்த குடும்பம்.. பிரபலம் கொடுத்த தைரியத்தால் ரீ என்ட்ரி

திரையுலகில் 17 வருடங்களாக நடிகையாக தமிழ், தெலுங்கு. கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அஞ்சலி, படத்தில் பெரும்பாலும் செம போல்ட் ஆன கதாபாத்திரத்தை எடுத்து நடிக்க கூடியவர். இவருடைய துணிச்சலான பேச்சு மற்றும் தைரியத்தை குடும்பம் தான் கொடுத்திருக்கிறது. அதே குடும்பத்தால் இவர் மிகவும் மோசமாக சித்திரவதைகளை அனுபவித்திருக்கிறார்.

இதனால் சினிமாவே வேண்டாம் என சில வருடங்கள் அவர் ஒதுங்கி இருந்துள்ளார். அதன் பிறகு அஞ்சலியின் நடிப்பு திறமை வீணாய் போய்விட கூடாது என பிரபலம் ஒருவர் கொடுத்த துணிச்சல்தான் அவரை மறுபடியும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க வைத்தது. ஆந்திராவில் பிறந்து வளர்ந்த அஞ்சலி தனது சித்தியுடன் சென்னைக்கு பள்ளி படிப்பிற்காக வந்துள்ளார்.

Also Read: சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வரும் 5 நடிகைகள்.. கொடுத்த கேரக்டராகவே வாழும் அஞ்சலி

அப்போதுதான் அவருக்கு கற்றது தமிழ் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடிக்கும் போது அஞ்சலி 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். முதல் படத்திலேயே அவருடைய இயல்பான நடிப்பை பார்த்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. அதிலும் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு படத்தில் அச்சு அசல் துணிக்கடையில் பணிபுரியும் பெண்ணாகவே மாறி இருப்பார்.

அதன் பின் எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய் உடன் இணைந்து நடித்தார். இந்தப் படத்தில் அவர்களுக்கிடையே கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது மட்டுமல்லாமல் திரை மறைவில் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசு கிசுக்கப்பட்டது. ஆனால் அந்த வதந்தியை இருவரும் மறுத்துவிட்டனர். அந்த சமயத்தில்தான் அஞ்சலியை அவருடைய சித்தி பல சித்திரவதைகளை செய்திருக்கிறார்.

Also Read: 17 வருட திரை பயணம்.. மிரட்டும் அஞ்சலியின் 50-வது பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

அவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என ஆந்திராவிற்கு சென்று விட்டார். அங்கு பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் உதவியுடன் தெலுங்கு படத்தில் நடித்தார். இப்போது மறுபடியும் அஞ்சலி தமிழ் படங்களில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அஞ்சலி தன்னுடைய 50வது படமான ஈகை என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆக்கினார்.

ஒரு நடிகை திரையுலகில் 50வது படம் நடிப்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல. அதுவும் குடும்பத்தில் ஏகப்பட்ட டார்ச்சர் இருக்கும் நிலையில் எந்தவித துணையும் இல்லாமல் இந்த அளவிற்கு அவர் முன்னேறி இருக்கிறார் என்றால் அவருடைய தன்னம்பிக்கை மட்டுமே முழு காரணம் என்று அஞ்சலியின் 37வது பிறந்தநாளான இன்று அவருடைய ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: 37 வயதில் அஞ்சலியின் மொத்த சொத்து மதிப்பு.. அந்த ஒரு விஷயத்திற்கு மட்டும் பல லட்சம் செலவு செய்வாராம்

Trending News