Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் இதுவரை செய்த ஒட்டு மொத்த அட்டூழியத்துக்கும் சேர்த்து முதல் முறையாக தோற்றுப் போய் நிற்கப் போகிறார். அதாவது தர்ஷினி கல்யாணம் பண்ண போகும் மண்டபத்திற்கு எப்படியோ குணசேகரனின் வீட்டு மருமகள்கள் வந்து விட்டார்கள். அத்துடன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அவர்களையும் வரவழைத்து விட்டார்கள்.
இது தெரிந்த குணசேகரன் உடனே போட்ட திட்டத்தை மாற்றி விட்டார். அதாவது தர்ஷினிக்கும் சித்தார்த்துக்கும் பதிலாக உமையாளின் மகள் கீர்த்தியையும், ராமசாமியும் மணமேடையில் உட்கார வைத்து விட்டார். பின்பே இதை பார்த்த போலீசார் தர்ஷினி இடம் உனக்கு இங்கே கட்டாய கல்யாணம் நடத்தி வைக்கிறார்களா என்று கேட்கிறார்கள்.
அதற்கு தர்ஷினி இல்லை என்று சொன்னதால் போலீஸ் எதுவும் பேச முடியாமல் வாயை மூடிக்கொண்டு போய்விட்டார்கள். அதன் பின் குணசேகரன், ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினியை மண்டபத்தை விட்டு வெளியே துரத்தி விட்டார். ஆனாலும் மறுபடியும் இவர்கள் அனைவரும் மண்டபத்தின் உள் போய்விடுகிறார்கள்.
எஸ்கேப் ஆகிய தர்ஷினி
போனதும் கல்யாணத்தை நிறுத்துவதற்காக குணசேகரன் இடம் போராடுகிறார்கள். இந்த சூழலில் மண மேடையில் இருப்பவர்களுக்கு திருமணம் நடந்து விடுகிறது. இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் நிற்கிறார்கள். அந்த வகையில் திருமணம் தர்ஷினிக்கு நடைபெறவில்லை என்பது தெரிந்து விட்டது. அதற்கு பதிலாக சித்தார்த், ஜனனியின் தங்கையான அஞ்சனாவுக்கு தாலி கட்டிவிட்டார்.
இதை கொஞ்சம் கூட எதிர்பாராத குணசேகரன் வாய் அடைத்துப் போய் எதுவும் பேச முடியாமல் நின்று விட்டார். ஆக மொத்தத்தில் குணசேகரன் ஏற்பாடு பண்ணின கல்யாணம் ஜனனி தங்கைக்கு சாதகமாக முடிந்து விட்டது. இப்பொழுதுதான் தர்ஷினி வாயைத் திறந்து உண்மையை போட்டு உடைத்து குணசேகரனின் முகத்திரையை கிழிக்கப் போகிறார்.
அத்துடன் ஜீவானந்தம் ஹீரோ மாதிரி என்டரி கொடுத்து உள்ளே நுழையப் போகிறார். கடைசியில் குணசேகரன் எதுவும் பேச முடியாமல் நான்கு மருமகள்களிடமும் மொத்தமாக தோற்றுப் போய் மண்ணை கவ்வ போகிறார். ஆனாலும் தர்ஷினி இந்த உண்மையை ஈஸ்வரிடம் ஆரம்பத்திலே சொல்லி இருந்தால் இந்த அளவிற்கு குளறுபடி நடந்திருக்க வாய்ப்பில்லை.