வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விஸ்வாசம் ஸ்டைலில் வெளிவந்த அண்ணாத்த போஸ்டர்.. திருவிழா கூட்டத்துல மாஸ் லுக்கில் தலைவர்

ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பலமுறை தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் குறித்து விட்டது. வருகின்ற தீபாவளிக்கு நவம்பர் 4 ஆம் தேதி அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர்.

அண்ணாத்த அப்டேட் இல்லாமல் காத்துக்கொண்டிருந்த ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. மேலும் அரசியல் சலசலப்புகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியின் படம் திரைக்கு வருவதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்து சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. சிவா மற்றும் ரஜினி  கூட்டணியில் நவம்பர் 4ம் தேதி தீபாவளிக்கு இந்த படம் வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

annaatthe-first-look
annaatthe-first-look

Trending News