திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது தெரியுமா.? கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினியை திரையரங்கில் பார்க்கும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் ரஜினி தவிர நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் மேலும் அதிகரித்துள்ளது. படம் குறித்த அனைத்து பணிகளும் முடிவடைந்து வரும் தீபாவளி அன்று நவம்பர் 4ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியை மையமாக கொண்டு உருவாகி உள்ளது என்பது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிகிறது. இந்நிலையில் படம் குறித்த மேலும் ஒரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

annaatthe
annaatthe

அதாவது அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அண்ணாத்த படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலை மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி பாடியுள்ளாராம். எனவே அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி தினமான செப்டம்பர் 25-ஆம் தேதி அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Trending News