வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

என்னங்க அண்ணாத்த, இப்படி ஆகி போச்சே! புதுசா கிளம்பிய பிரச்சனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலையில் இடியே இருக்கோ அது போல ஒரு செய்தி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் சன்பிக்சர்ஸ் திரைப்படத்தையும் கதிகலங்க வைத்துள்ளது. எது நடக்கக்கூடாது என்று பயந்தாரோ அது முதல் நாளே நடந்ததுதான் சோகமான விஷயம் என்கிறது சினிமா வட்டாரம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது அண்ணாத்த. கண்டிப்பாக இளம் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்க வாய்ப்பு இல்லை என்பது போன்ற கடுமையான விமர்சனங்களை வந்த நிலையில் குடும்ப ரசிகர்கள் இந்த படம் பெரிதும் கவர்ந்து உள்ளதாக தியேட்டர் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனால் வருகின்ற நாட்களில் இன்னமும் அண்ணாத்த படத்தின் வசூல் அதிகமாக இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வந்தநிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டது. அது எப்படி பெரிய படத்தை ரிலீஸ் செய்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என்பது போல் ஒரு சம்பவம் தான் தற்போது நடைபெற்றுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள அண்ணாத்த படம் முதல்நாளே பைரசி இணையதளங்களில் வெளியாகி படக்குழுவினர் அதிர்ச்சி ஆகி உள்ளது. இது நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பெரிய அளவில் செலவு செய்து கோர்ட்டுக்குப் போய் ஆர்டர் எல்லாம் வாங்கி பல இணையதளங்களை முடக்கியது. ஆனால் எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

எங்கிருந்து இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து தீர விசாரித்து வருகிறதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். இது ஒருபுறமிருக்க அப்பகுதி இணையதளங்களில் வெளியான படங்கள் பெரிய அளவில் வசூலை பாதித்தது இல்லை என்பதால் அதை யார் செய்தது என்பதை மட்டும் கண்டு பிடிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

இதை இப்படியே விட்டுவிட்டால் சரிவராது என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கையாம். மற்றபடி அண்ணாத்த வசூல் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.

Trending News