சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

அண்ணாத்த ரஜினியை அந்தப் படம் மாதிரி பார்க்கலாம்.. ஹிட் கொடுக்க 20 வருஷம் பின்னாடி போகும் சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. விஸ்வாசம் என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த ஒரு சிறுத்தை சிவாவை கூப்பிட்டு ரஜினி வாய்ப்பு கொடுத்துள்ளார்.

சமீபகாலமாக ரஜினி தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அப்போது தான் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி தரமான கமர்ஷியல் படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார்.

அப்படியும் சமீபத்தில் வெளியான தர்பார் திரைப்படம் அவரது காலை வாரிவிட்டது. இருந்தாலும் அடுத்ததாக வெளியாகும் அண்ணாத்த திரைப்படம் தர்பார் நஷ்டத்தை வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கும் என நம்பிக்கொண்டிருக்கிறோம்.

அதற்கு காரணம் அண்ணாத்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் அவ்வளவு அருமையாக அமைந்துள்ளதாக ரஜினியே சிறுத்தை சிவாவிடம் தொடர்ந்து கூறி வருகிறாராம். இப்படித்தான் பேட்ட படத்தில் பழைய ரஜினியை கார்த்திக் சுப்புராஜ் மீட்டெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் அந்த கால சூப்பர் ஹிட் படங்களான முத்து, அருணாச்சலம் மற்றும் படையப்பா போன்ற படங்களை போல அண்ணாத்த படத்தில் துருதுருவென நகைச்சுவை காட்சிகளில் பின்னி பெடல் எடுத்து வருகிறாராம் ரஜினி.

அந்த காலத்தில் காமெடி கலந்த ரஜினியின் நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதேபோல் அண்ணாத்த திரைப்படத்தில் கதாபாத்திரம் கிடைத்துள்ளதால் ரசித்து ரசித்து நடித்து வருகிறார். இதனை அந்த படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் காமெடி நடிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

annaatthe-cinemapettai-01
annaatthe-cinemapettai-01

Trending News