வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இணையத்தில் கசிந்த அண்ணாத்த படம்.. HD பிரிண்ட் பார்த்து அதிர்ச்சியான சன் பிக்சர்ஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி சரவெடியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த (annaatthe online full movie download). இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் கிராமத்து பின்னணியில் நடித்துள்ள படம் என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து மிகவும் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தியது.

படம் வெளியாகி சில வாரங்கள் ஆன பின்னும் இன்றும் அண்ணாத்த படத்துக்கு தியேட்டரில் கூட்டம் குறையாமல் இருந்து வருகிறது. சென்னை உட்பட பல பகுதிகளிலும் வசூலை வாரி குவித்துள்ளது இந்த திரைப்படம்.

பல திரைப்படங்கள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளிவருகின்றன அந்த வகையில் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படமும் இந்த இணையதள திருட்டுக்கு பலியாகி உள்ளது. இந்த திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ், மூவி ரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணைய தளங்களில் முறையற்று வெளிவந்துள்ளன.

அண்ணாத்த திரைப்படத்தின் இந்த ஆன்லைன் கசிவு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள நிறுவனங்களை கதி கலங்க செய்துள்ளது. இந்த திரைப்படத்திற்கான ஓடிடி உரிமையை சன் நெக்ஸ்ட் மற்றும் நெட் பிளிக்ஸ் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் முந்தைய படமான தர்பார் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு மிகுந்த எதிர்பார்ப்பு களுக்கிடையே வெளியான அண்ணாத்த திரைப்படம் தற்போது மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் இந்த இணையதள கசிவு அவரது ரசிகர்களை கவலை பட செய்துள்ளது.

Trending News