சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுடன் ஏதாவது ஒரு முன்னணி நடிகரின் படம் இணைந்து வெளியாவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் முன்னர் போல் ரஜினி படங்களின் வசூல் இல்லை.
அந்த வகையில் கடைசியாக 2019ஆம் ஆண்டு ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின. இந்த இரண்டு படங்களுமே வசூல் வேட்டையாடினாலும் பேட்ட படத்தை விட அஜித்தின் விஸ்வாசம் படம் கொஞ்சம் அதிகமான லாபத்தை ஈட்டியது.
அப்போதே ரஜினியை அஜித் ஓரங்கட்டி விட்டார் என்று பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அரசியல் சர்ச்சை, உடல்நிலை பிரச்சினை என அனைத்தையும் தாண்டி வந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அண்ணாத்த படம் மிக முக்கியமான படம்.
இந்த படத்தின் வசூலைப் பொறுத்தே அவரது அடுத்தடுத்த படங்களில் சம்பளம் முதற்கொண்டு அனைத்தும் அமையும். இதனால் தீபாவளிக்கு அண்ணாத்த படத்தை வெளியிட்டு செமையாக கல்லா கட்டிவிடலாம் என நினைத்தவருக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் அதே தேதியில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை படம் வெளியாவதற்கான வேலைகள் வேக வேகமாக நடைபெற்று வருகிறது.
அஜித் படமும் ரஜினி படமும் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாவதால் இந்த இரண்டு படங்களுமே தனியே வந்தால் தான் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். இது தெரிந்தும் வலிமை படக்குழு அடம்பிடித்து களமிறக்குவது சரியில்லை என கவலையில் இருக்கிறதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
இதை ட்விட்டரில் எப்போதுமே சரியான அப்டேட் கொடுக்கும் பிரபல நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் கண்டிப்பாக மீண்டும் இந்த முறை இருவரும் மோதுவது உறுதி என முடிவு செய்து இணையத்தில் தங்களுடைய சேஷ்டைகளை ஆரம்பித்துவிட்டனர்.