தமிழ் சினிமாவில் பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு சங்கர் மீண்டும் படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இந்தியன் 2 படம் கிடப்பில் போடப்பட்டதால் அடுத்ததாக தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்த படத்தில் கதை உதவிக்காக சங்கர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி வைத்திருந்த கதையை வாங்கி படமாக்குவதாகவும் ஒரு செய்தி இணையத்தில் உலா வருகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
இந்நிலையில் ஷங்கர் படத்தில் நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல ஹிந்தி நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம் சரணுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பல நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் ஜெகபதிபாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரண் நடித்த ரங்கஸ்தலம் படத்தில் மிரட்டல் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகிவரும் அண்ணாத்த படத்திலும் இவர்தான் வில்லன் என்பதும் கூடுதல் தகவல்.
