திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மாஸாக சண்டை போடும் அண்ணாச்சியின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.. விஜய், அஜித் எல்லாம் இனி அவ்வளவுதான்!

காசு பணம் இருந்தால் காக்கா கூட கலராகிவிடும் என்ற காலம் மாறி காசு பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்கலாம் என்கிற நிலைமை வந்துள்ளது. தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல் கேமரா வைத்திருப்பவர் எல்லாம் ஹீரோ ஆகி விடும் காலம் இது.

சினிமாவுக்கும் தனக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லாத சரவணா ஸ்டோர் உரிமையாளர் அண்ணாச்சி சரவணன் மனதை யார் கொடுத்தார்கள் என்பது தான் தெரியவில்லை. தன்னுடைய கடை விளம்பரத்தில் நடித்தவரை ஹீரோமாதிரி இருக்கிறீர்கள் என்று கூறிவிட்டார்கள் போல.

உடனடியாக 30 கோடி பட்ஜெட்டில் தாறுமாறாக உருவாகிறது அண்ணாச்சி நடிக்கும் புதிய படம். சும்மா சொல்லக்கூடாது, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், விவேக் மற்றும் ரோபோ சங்கர் போன்ற காமெடி நடிகர்கள், பெரிய டெக்னீஷியன்கள் என படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து அஜித் மற்றும் விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கினார் என்பது கூடுதல் தகவல். சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் விளம்பர படங்களை இயக்கி கொண்டிருந்தவர்கள் தற்போது அவரின் படத்தை இயக்கி வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணாச்சி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கி உள்ளது. முதல் காட்சியே முன்னணி நடிகர்கள் விஜய், அஜித் சண்டைக் காட்சி ரேஞ்சுக்கு மாஸாக எடுத்து வருகிறார்கள். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

annachi-saravana-cinemapettai
annachi-saravana-cinemapettai

இந்த புகைப்படத்தை பார்த்த பல நட்சத்திரங்கள் அண்ணாச்சி தல தளபதி ஆகிய இருவருக்கும் போட்டியாக வந்து விடுவாரோ என அச்சம் தெரிவிக்கின்றனர். எந்த புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்பது தெரியாதல்லவா. பொறுத்திருந்து பார்ப்போம், அண்ணாச்சியின் ஆக்ரோஷத்தை!

Trending News