செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ஆண்டவருக்காக விட்டுக்கொடுத்த அண்ணாச்சி.. இசை வெளியீட்டு விழாவில் நடந்த திருப்பம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் விக்ரம். வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பல பிரபலங்கள் கலந்து கொண்டு அசத்திய இந்த விழாவில் வெளியிடப்பட்ட டிரைலர் குறித்த சம்பவங்கள் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் உட்பட பலரும் படப்பிடிப்பின்போது நடந்த பல சுவாரசியமான சம்பவங்களை ரசிகர்களுக்கு கூறினார்கள்.

அந்த வகையில் தற்போது அந்த இசை வெளியீட்டு விழாவில் நடந்த ஒரு முக்கிய திருப்பம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த மே 15 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஆனால் உண்மையில் அந்த தேதியில் அங்கு சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடிப்பில் உருவாகி இருக்கும் தி லெஜன்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாதான் நடக்க இருந்தது. ஆனால் கமல் தரப்பிலிருந்து அண்ணாச்சியிடம் அந்த தேதி அவர்களுக்கு வேண்டும் என்று கேட்டுக் கொண்ட படியால் அண்ணாச்சியும் அவர்களுக்காக விட்டுக் கொடுத்துள்ளார்.

ஏனென்றால் விக்ரம் படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. அதேபோல் அண்ணாச்சியின் படம் ஜூலையில் வெளியாக இருக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது முதலில் வெளியாக இருக்கும் விக்ரம் படத்துக்காகத்தான் அண்ணாச்சி அந்த தேதியை விட்டுக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பலருக்கும் தெரியாத இந்த தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. இதன் மூலம் அண்ணாச்சியை கமலின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதுவே அவருடைய படத்திற்கு ஒரு பிரமோஷன் ஆகவும் மாறியுள்ளது. சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளிவந்த வாடிவாசல் பாடல் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News