வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கதை புடிச்சு போய் நாலு மடங்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்த அண்ணாச்சி.. தனுஷ் இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்

Legend Saravanan: நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிப்பில் கடந்த வருடம் லெஜெண்ட் படம் வெளியானது. மிகவும் பிரம்மாண்டமாக இருந்த அப்படத்திற்கு பிறகு அண்ணாச்சியின் அடுத்த அவதாரத்தை காண ரசிகர்கள் பேராவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னும் அவருடைய அடுத்த பட அறிவிப்பு மட்டும் வெளிவரவில்லை. ஆனால் விரைவில் நல்ல செய்தியை சொல்கிறேன் என்று அண்ணாச்சி ஒரு முறை கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது அடுத்த அதிரடிக்கு அவர் தயாராகி இருக்கிறார்.

அதுவும் தனுஷின் ஆஸ்தான இயக்குனரை அவர் நான்கு மடங்கு அதிக சம்பளம் கொடுத்து வளைத்து போட்டு இருக்கிறார். அந்த வகையில் கொடி, பட்டாஸ் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கும் துரை செந்தில்குமார் தான் அண்ணாச்சியின் அடுத்த பட இயக்குனர்.

Also read: சூப்பர் ஸ்டார் பட்டத்தால என்ன பிரயோஜனம்.? வம்படியாக வந்து சர்ச்சையில் சிக்கிய தனுஷ் பட ஹீரோயின்

தற்போது சூரியை வைத்து கருடன் படத்தை இவர் இயக்கி வருகிறார். அடுத்த மாத தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகளும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இந்த கேப்பில் அண்ணாச்சியின் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.

ஆனால் முதலில் இவர் மிகவும் தயக்கம் காட்டி இருக்கிறார். ஏனென்றால் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரோல் செய்து கலாய்ப்பார்கள் என்ற பயம்தான். இருந்தாலும் சில சமரசங்களுக்கு பிறகு அவர் அண்ணாச்சியிடம் சென்று கதையை கூறியிருக்கிறார்.

அது அவருக்கு பிடித்துப் போனதால் பல மடங்கு சம்பளத்தை கொடுத்து புக் செய்து விட்டாராம். எப்போதுமே கணக்கு பார்க்காமல் வாரி வழங்கும் அண்ணாச்சி இப்போது அடுத்த கட்ட சம்பவத்திற்கு தயாராகி விட்டார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: போட்டி போட்டு ரீ-ரிலீஸ் ஆகிய ஹிட்டான 5 படங்கள்.. சிம்பு, தனுஷ் யுத்தத்திற்கு நடுவே வந்த வாரணம் ஆயிரம்

Trending News