வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஆடியோ லான்ச்க்கு நடிகைகளுக்கு பல கோடி செலவு.. சொத்தை ஃபுல்லா இப்படி அழிச்சுடாதீங்க அண்ணாச்சி

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அண்ணாச்சி தற்போது தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் ஊர்வசி ரௌடலா, பிரபு, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தில் நடித்திருந்த நட்சத்திரங்கள் உட்பட பல இளம் நடிகைகள் அந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதிலும் முக்கியமாக பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, லட்சுமி ராய் உள்ளிட்ட பல நடிகைகளும் அந்த விழாவிற்கு வந்திருந்தனர். இதனால் அந்த அரங்கமே ரசிகர்கள் கூட்டத்தால் களைகட்டியது. மேலும் அந்த நிகழ்ச்சியில் படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பொதுவாக சினிமாவுக்கு வந்து கோடி கோடியாக சம்பாதிப்பதை தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சம்பாதித்த பணத்தையெல்லாம் முதல் படத்திலேயே தண்ணியாக செலவு செய்யும் அண்ணாச்சியை பார்த்து திரையுலகமே வியந்து போய் உள்ளது.

அதாவது இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகைகளுக்காக அண்ணாச்சி செய்த செலவுகளின் மொத்த ரிப்போர்ட் தற்போது வெளிவந்துள்ளது. அதில் ஒவ்வொரு நடிகைக்கும் தனித் தனியாக ரூம், கேரவன் என்று அண்ணாச்சி தடபுடலாக ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

அதில் பூஜா ஹெக்டே 65 லட்சமும், தமன்னா 25 லட்சமும், ஹன்சிகா 15 லட்சமும் அந்த விழாவுக்கான சம்பளமாக பெற்றுள்ளனர். மேலும் லக்ஷ்மி ராய் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவருக்கும் 10 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கவர்ச்சி நாயகி யாஷிகா ஆனந்த் 8 லட்சமும், மற்ற நடிகைகளுக்கு தலா 5 லட்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலே அதிர்ச்சியை கிளப்பிய நிலையில் நடிகைகள் அனைவரும் தங்குவதற்காக அண்ணாச்சி ஐடிசியில் சூட் ரூம் போட்டுக் கொடுத்துள்ளார். அந்த ரூமுக்கான ஒரு நாள் வாடகை மட்டுமே 40 ஆயிரம் ரூபாய். அப்படியிருக்கும் போது ஒட்டு மொத்த நடிகைகள் தங்கிய செலவு மட்டுமே பல லட்சத்தை தாண்டியுள்ளது.

மேலும் இவர்கள் அனைவரும் வந்த இடத்தில் ஓய்வு எடுப்பதற்காக கிட்டத்தட்ட 30 கேரவன்களை அண்ணாச்சி ஏற்பாடு செய்துள்ளார். இதன் ஒரு நாள் வாடகை 40 ஆயிரம் ரூபாய். இப்படி அண்ணாச்சி நடிகைகளுக்காக காசை கணக்கு பார்க்காமல் செலவழித்துள்ளார். இதை பார்த்த பலரும் வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.

Trending News