Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அன்பு பேச்சைக் கேட்டு ஆனந்தி மகேஷின் பிறந்த நாளுக்கு போகாமலேயே இருந்திருக்கலாம் போல.
மகேசை ஏமாற்றக்கூடாது எல்லா உண்மையும் சொல்லப் போகிறேன் என ஆனந்த் அந்த பிறந்தநாள் விழாவுக்கு சென்றாள்.
அன்புக்கு மகேஷின் மனசை அவன் பிறந்த நாள் விழாவின்போது காயப்படுத்தக் கூடாது என நினைக்கிறான். ஆனால் ஆனந்தி இனியும் மகேசை ஏமாற்ற கூடாது என சொன்னாள்.
கம்பி கட்டுர கதையா இருக்கே!
ஆனந்தி சொன்னது ஒன்னு செஞ்சது ஒன்னு என இப்போது ஒரு வேலையை பார்க்கிறாள். மகேஷ் ஆனந்தியை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறான்.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி மகேஷிடம் அன்புவை காதலிப்பதை சொல்வது போல் காட்டப்பட்டு இருக்கிறது.
ஆனால் உண்மையில் ஆனந்தி அழகனை காதலிப்பதாகத்தான் மகேஷிடம் சொல்கிறாள்.
இப்படி ஒரு கம்பி கட்டுற கதையை கட்டியதற்கு பதிலாக ஆனந்தி அந்த பிறந்தநாள் விழாவுக்கு போகாமலேயே இருந்திருக்கலாம்.