புதன்கிழமை, மார்ச் 12, 2025

பணத்தை வாங்க மீனாவிற்கு ஐடியா கொடுத்த அண்ணாமலை.. விஜயாவின் வக்ரபுத்தியை பார்த்து மிரண்டு போன ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சிந்தாமணி விஜயாவுக்கு போன் பண்ணி உங்க மருமகள் இனி பிசினஸ் பண்ண முடியாது. மொத்தமாக 2 லட்ச ரூபா நஷ்டம் ஆகிவிட்டது. இனி மீனா ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டே தான் இருப்பார். அத்துடன் இனி உங்களுக்கு அடிமையாக, வீட்டில் வேலைக்காரி போல் எல்லா வேலையும் பார்ப்பார் என்று சொல்லியவுடன் விஜயா ரொம்பவே சந்தோஷம் அடைந்து விட்டார்.

இந்த சந்தோஷத்தை உடனே கொண்டாட வேண்டும் என்ற நினைப்பில் விஜயா, ரவிக்கு போன் பண்ணி இரவு எல்லாத்துக்கும் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கிட்டு வந்து விடு. அத்துடன் சுவீட்டையும் முக்கியமாக கொண்டு வந்து விடு என்று சொல்லி சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார். இதை ரவி, சுருதியிடம் சொல்லியதும் சுருதி, உங்க அம்மா இவ்ளோ சந்தோசமாக இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக மீனாவுக்கு ஏதோ ஒரு பிரச்சனை நடந்திருக்கிறது.

மீனா கஷ்டப்பட்டால் தான் உங்க அம்மா இவ்ளோ சந்தோஷப்படுவாங்க என்று ரவியிடம் சொல்கிறார். ஆனாலும் என்ன காரணம் என்று தெரியாததால் விஜயா சொன்னபடி எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். அதே நேரத்தில் மீனா, ஏமாந்து போனதை நினைத்து பீல் பண்ணிக் கொண்டே வீட்டிற்கு வருகிறார். ஆனால் நடந்த விஷயத்தை மீனா யாரிடமும் சொல்லாமல் தனியாக உட்கார்ந்து அழுகிறார்.

ஸ்ருதி என்ன ஆச்சு என்று கேட்ட நிலையில் எதுவும் சொல்லாமல் சமாளித்த நிலையில் விஜயா சந்தோஷமாக சாப்பிட கூப்பிடுகிறார். ஆனால் மீனா, இன்னைக்காவது சந்தோசமாக இருக்கீங்களே பரவாயில்லை நீங்க சாப்பிடுங்க என்று சொல்லி விடுகிறார். பிறகு எல்லோரும் சாப்பிட்ட நிலையில் ரோகிணி மட்டும் விஜயாவிடம் என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு விஜயா, இரண்டு லட்ச ரூபாய் ஆர்டர் கிடைச்சது என்று ரொம்பவே ஓவராக ஆடின மீனாவின் பணம் தொலைந்து நஷ்டம் ஆகிவிட்டது என்று சொல்கிறார்.

இதை எனக்கு சிந்தாமணி தான் சொன்னார் என்று விஜயா சொன்னதும் எனக்கு ரொம்பவே சந்தோஷமாக உள்ளது. இதை கொண்டாடுவதற்காகத்தான் இந்த சாப்பாடு என்று சொல்லிய நிலையில் ரோகிணி, ஒண்ணுமே பண்ணாமல் இருக்கும் மீனாவையே இந்த பாடு படுத்துறாங்க. என்னுடைய விஷயம் எல்லாம் தெரிந்தது என்றால் என்ன எல்லாம் செய்வார்களோ, இவங்க கிட்ட கொஞ்சம் உஷாராகத்தான் இருக்கணும் என்று விஜயாவின் வக்ர புத்தியை கண்டு ரோகிணி மிரண்டு போய்விட்டார்.

அடுத்ததாக மீனா, முத்துவிடம் இந்த விஷயத்தை சொல்லலாம் என்று நினைக்கிறார். அதே நேரத்தில் முத்துவுக்கு இந்த விஷயம் தெரிந்து விட்டால் நேரடியாக அந்த மண்டபத்தில் உள்ள மேனேஜரை அடித்து பிரச்சனையாகிவிடும் என்பதால் பயத்தில் முத்துவிடம் எதுவும் சொல்லாமல் மறைத்து விடுகிறார். அந்த வகையில் எப்படியாவது அந்த பணத்தை திரும்ப பெற வேண்டும் என்று யோசித்த நிலையில் அண்ணாமலை ஒரு ஐடியா கொடுக்கிறார்.

அந்த ஐடியாவின் படி மீனா யோசிப்பது என்னவென்றால் நம்மளை ஏமாற்றியவர்களுக்கு நாம் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்றால் அதே வழியில் தான் போக வேண்டும். அதற்கு நாம் அந்த மேனேஜருக்கு ஒரு டிராமா போட்டு ஏமாற்ற வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். இந்த டிராமாவில் சுருதி மற்றும் சீதாவையும் கூட்டணி சேர்த்து மீனா அந்த மேனேஜரையும் சிந்தாமணியும் சிக்க வைக்கப் போகிறார். மீனா எடுக்கும் இந்த முயற்சியில் நிச்சயம் வெற்றி பெற்று சிந்தாமணி மற்றும் விஜயா மூஞ்சில் கரியை பூசி விடுவார்.

Trending News