வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

மனோஜை நம்பிய விஜயாவுக்கு அண்ணாமலை கொடுக்கும் தண்டனை.. ரோகிணி மூஞ்சில் கரியை பூசிய முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், வாயைத் திறந்தாலே பொய் பித்தலாட்டம் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வரும் ரோகிணி எப்பொழுது மாட்டப் போகிறார் என்று அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ரோகிணி ஒவ்வொரு விஷயத்திலும் எஸ்கேப் ஆகி முத்து மீனாவை மட்டம் தட்டும் அளவிற்கு தான் கதை நகர்ந்து வருகிறது.

இதனால் சற்று டிஆர்ப யில் பின்னடைவை சந்தித்ததால், தற்போது மனோஜ் மூலமாக ஒரு குதூகலத்தை ஏற்படுத்தப் போகிறது. அந்த வகையில் தன்னுடைய பிசினஸ்காக தம்பி மனைவி மீனாவின் நகையை விற்று, அதன் மூலம் லாபம் கிடைத்திருக்கிறது என்று எல்லோரையும் நம்ப வைத்த மக்கு மனோஜ் பற்றி ஆதாரம் முத்துவிற்கு கிடைத்து விட்டது.

மனோஜை நம்பியதால் விஜயாவிற்கு ஏற்பட போகும் அவமானம்

தன்னுடைய பொருள்களை ஏமாற்றி ஒருவர் வாங்கிட்டு போயிட்டார் என்று ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷனில் மனோஜ் கம்ப்ளைன்ட் கொடுத்தார். அதன்படி போலீசார் அந்த ஏமாற்று நபர்களை கண்டுபிடித்து பொருட்களையும் வாங்கிட்டு வந்து விட்டார்கள். பிறகு மனோஜ்க்கு போன் பண்ணி உங்களுடைய பொருள் வந்து விட்டது செக் பண்ணிட்டு எடுத்துட்டு போங்க என்று சொல்லிவிட்டார்கள்.

உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பி வந்த மனோஜ், அங்கே எதுவுமே என்னுடைய பொருள் இல்லை என்று போலீசாரிடம் கூறுகிறார். அதற்கு போலீஸ் அப்படி என்றால் உங்க பொருள்களை அவர்கள் விற்று இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். உடனே மனோஜ், நான் ஏமாந்த விஷயம் என்னுடைய குடும்பத்திற்கு தெரியாது. நான் அதை சமாளிப்பதற்காக என் மனைவியிடம் ஒரு லட்ச ரூபாய் லாபம் வந்திருக்கிறது என்று பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறேன்.

அந்த வகையில் என்னுடைய பொருள் கிடைத்தால் மட்டும்தான் என்னுடைய குடும்பத்தில் உள்ள பிரச்சனை சரி செய்ய முடியும் என்று மனோஜ், போலீஸிடம் எல்லா உண்மையும் கூறுகிறார். இதை லாக்கப்பில் இருக்கும் முத்து மற்றும் நண்பர் கேட்டுக் கொண்டு வீடியோ எடுத்து விடுகிறார்கள். உடனே கையில் இருக்கும் மொபைல் வீடியோவை எடுத்துவிட்டு முத்து வீட்டிற்கு வருகிறார்.

அங்கே போனதும் அனைவரும் முன்னிலையிலும் ரோகிணி இடம் அன்னைக்கு சொன்ன, மனோஜ் புத்திசாலியா இல்லையான்னு கூடிய சீக்கிரம் தெரிஞ்சுக்க போறீங்கன்னு. இப்ப நல்லா தெரிஞ்சுகிட்டேன் நீங்க எல்லாரும் தெரிஞ்சுக்கோங்க என்று முத்து சொல்கிறார். 4 லட்ச ரூபாய் சம்பாதித்தது சொன்னானே, நாலு லட்சத்தை ஏமாந்தத சொன்னானா என்று முத்து கேட்கிறார்.

உடனே முத்து கையில் இருக்கும் மொபைல் வீடியோவை டிவியில் போட்டு காட்டுகிறார். அதில் மனோஜ் போலீஸ் ஸ்டேஷனில் பேசிய அனைத்து விஷயங்களும் தெரிகிறது. இதை பார்த்து அதிர்ச்சியில் அனைவரும் நிற்கிறார்கள். ஆனால் மனோஜ் மற்றும் விஜயா மட்டும் பயத்தில் திருதிருவென்று முழிக்கிறார்கள். அத்துடன் இந்த வீடியோவை பார்த்த ரோகினி, மனோஜை பார்த்து முழிக்கிறார்.

ஆக மொத்தத்தில் பொரிவளையில் எலியை சிக்க வைப்பது போல் முத்துவிடம் மனோஜ் மாட்டிக் கொண்டது மட்டுமில்லாமல் ரோகிணியையும் அவமானப்படுத்துவதற்கு ஒரு விஷயம் கிடைத்து விட்டது. மனோஜை நம்பிய ரோகினி எந்த அளவிற்கு ஆட்டம் போட்டார். அதற்கு மொத்தமாக ஆப்பு வைக்கும் விதமாக தற்போது மனோஜ் ,ரோகிணியை அசிங்கப்படுத்தி விட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த தில்லாலங்கடி வேலைக்கு பின்னாடி இருந்து மனோஜ்க்கு சப்போர்ட் செய்தது விஜயா தான் என்று தெரிய வருகிறது. உடனே அண்ணாமலை, நீ திருந்தவே மாட்டியா? மகன் மீது இருக்கும் பாசத்தினால் அவன் என்ன பண்ணுகிறான் என்று தெரியாமல் கண்மூடித்தனமாக நம்புகிறாய். அது இப்பொழுது எந்த அளவிற்கு வந்து விட்டிருக்கிறது என்பது உனக்கு புரியலையா?

மனோஜ்க்கு ஒரு கஷ்டம் என்றால் உன்னுடைய நகை அல்லது அவனுடைய பொண்டாட்டி நகையை எடுத்து கொடுத்து உதவி பண்ணி இருக்கணும். அதை விட்டுட்டு மீனாவின் நகையை கொடுத்தது மட்டுமில்லாமல் மீனா குடும்பத்தின் மீது பழியை சுமத்தி பெரிய பாவத்தை சுமந்து விட்டாய். இனியும் உன்னுடன் இருப்பது வேஸ்ட் என்று விஜயாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் அளவிற்கு அண்ணாமலையின் பேச்சு மிகப்பெரிய தண்டனையாக மாறிவிட்டது.

இதுவரை மீனா மற்றும் முத்துவிடும் ஓவராக ஆட்டம் போட்ட ரோகினிக்கு இது மிகப்பெரிய சவுகடியாக விழுந்து விட்டது. இனியும் இந்த மக்கு மனோஜை நம்பி ஓவர் ஆட்டம் போட்டால் தொடர்ந்து அவமானம் தான் பட வேண்டும். இதனைத் தொடர்ந்து இன்னும் கூடிய விரைவில் ரோகிணி பற்றிய விஷயங்களும் ஒவ்வொன்றாக வெளிவர போகிறது. அப்பொழுதுதான் இந்த ரோகினி நம்பிய குற்றத்திற்கு விஜயாவிற்கு பதிலடி கிடைக்கப் போகிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலின் சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News