Annamalai: நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் நேற்று தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. அதில் கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இல்லை என அண்ணாமலை பரபரப்பை கிளப்பியுள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய ஆர்வத்துடன் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பலருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.
அதிலும் இறந்து போன கணவனின் பெயர் பட்டியலில் இருக்கிறது. உயிரோடு இருக்கும் மனைவியின் பெயர் இல்லை. அதேபோல் ஒரே இடத்தில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு லட்சம் வாக்காளர்கள் மாயம்
மேலும் பல இடங்களில் பாஜக தொண்டர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு இருக்கிறது என பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தேர்தல் ஆணையம் இதில் சரியாக செயல்படவில்லை எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும் இதில் அரசியல் சூழ்ச்சி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் சில பதிலடிகளை கொடுத்து வருகின்றனர்.
தோல்வி பயத்தினால் தான் இப்படி பேசுகிறீர்களா? இவ்வளவு நாட்கள் வாக்காளர் பட்டியல்களை சரி பார்க்காமல் என்ன செய்தீர்கள்? கடைசி நேரத்தில் நல்லா உருட்டுறீங்க என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
அண்ணாமலையின் புகார்
மேலும் சிலர் நீங்க போலீஸ்தான கண்டுபிடிங்க என்றும் வடிவேலு கிணத்த காணோம்னு சொல்ற கதையால இருக்கு என்றும் கலாய்த்து வருகின்றனர். இப்படித்தான் நேற்று ராதிகா செய்தியாளர்களிடம் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என சொல்லி மாட்டிக் கொண்டார்.
உடனே ஒரு நிருபர் அப்ப இந்தியா கூட்டணி தான் ஜெயிக்குமா என சரியான பாயிண்ட்டை பிடித்தார். அதை அடுத்து அண்ணாமலையின் இந்த பேச்சும் சர்ச்சையாகியுள்ளது.