வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அண்ணாமலைக்கு நடந்திருப்பது பெரும் சூழ்ச்சி.. வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்த பிக் பாஸ் பிரபல நடிகை

சமீபத்தில் பாஜக கட்சியை சேர்ந்த டி.கே.ராகவன் வீடியோ சமூக வலைகளில் வெளியிடப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பூஜை அறைக்குள் எடுக்கப்பட்ட அந்த வீடியோவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் வீடியோ வெளியிட்ட மதன் என்பவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதற்குள் அடுத்ததாய் சில ஆடியோக்களையும் வெளியிட்டு மதன் சில அதிர்வுகளை ஏற்படுத்தினார்.

அந்த ஆடியோவில் மாநில செயலாளர் அண்ணாமலை அவர்களே வீடியோவை வெளியிட சொல்வது போன்று இடம் பெற்றிருந்தது. இதற்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தொடர்ந்த மதன் பல பெண்களின் பிரச்சனைகளுக்கு அண்ணாமலை காரணமாக அமைவார் என கூறியிருந்தார்.அதற்கு ஆதரவாக களமிறங்கிய பா.ஜ.க வின் உறுப்பினரும் பிரச்சார பேச்சாளருமான காயத்ரி ரகுராம் சமீபத்தில் ஒரு வீடியோ வெியிட்டிருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது எங்கள் மாநில தலைவர் திரு அண்ணாமலை ஜி அவர்கள் எல்லோரிடமும் மிகுந்த கனிவோடும் பாசத்தோடும் நடந்து கொள்பவரே ஔிய கண்ணியம் தவறுபவர் இல்லை என்றும் கட்சியின் பல்வேறு பெண் உறுப்பினர்களையும் காயத்ரி உட்பட அனைவரையும் சகோதரி என்று தான் அழைப்பார் என்றும் மேலும் பெண்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் கூறினார்.

இங்கு நடக்கின்ற பிரச்சினைகளை பற்றி அதிகம் கவனம் கொள்ள தேவையில்லை நாங்கள் அண்ணாமலைக்கு துணையாக நிற்போம் என குரல் கொடுத்துள்ளார். வீடியோவுக்கு கீழ் வந்த பின்னூட்டங்கள் பல்வேறு காரசாரமான கேள்விகளை முன் வைத்தாலும் காயத்ரி பதிலேதும் தரவில்லை.

Trending News