வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

விஜயாவை அவமானப்படுத்தும் அண்ணாமலை, திருந்தாத மீனா.. வேடிக்கை பார்க்கும் முத்து அடங்காத ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா மற்றும் மனோஜ் செய்த தவறை முத்து கண்டுபிடித்து விட்டார். அத்துடன் குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி இவர்கள் பண்ணிய பொய் பித்தலாட்டத்தையும் போட்டு உடைத்து விட்டார். இதனால் கோபப்பட்ட அண்ணாமலை, மனோஜை அடித்து வெளுத்து விட்டார். ஆனால் இதற்கெல்லாம் காரணமாக இருந்த விஜயாவிடம் அண்ணாமலை இனிமேல் நான் பேசமாட்டேன்.

இனி என் முகத்தில் முழிக்காத என்று திட்டியபடி கோவப்பட்டதால் விஜயா என்ன செய்வது என்று தெரியாமல் ரூமுக்குள் சென்று கதவை அடைத்து விட்டார். பிறகு விஜயாவை வெளியே வர வைப்பதற்காக முத்து, பார்வதி அத்தைக்கு போன் பண்ணி வரச் சொல்லி பிரச்சினையை தீர்க்க பார்த்தார். அந்த வகையில் வெளியே வந்த விஜயா, அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்டார்.

சூடு சொரணை இல்லாமல் இருக்கும் மீனா

ஆனால் அண்ணாமலை என்னிடம் எந்த மன்னிப்பும் கேட்கத் தேவையில்லை மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டு ஆத்திரப்பட்ட விஜயா, நான் இந்த பூக்காரியிடம் மன்னிப்பு கேட்கவா அது எந்த ஜென்மத்திலும் நடக்காது. என் கௌரவத்தை என்னைக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி கையில் போட்டிருந்த நகைகளை கழட்டி மீனாவின் மூஞ்சியில் தூக்கி எறிந்து கொடூரமாக நடந்து கொண்டார்.

அந்த வகையில் இனி எப்பொழுதும் விஜயா திருந்த மாட்டார் என்று அண்ணாமலை பேசாமல் போய்விடுகிறார். இவ்ளோ நடந்தும் சூடு சொரணை இல்லாமல் மீனா அந்த வீட்டில்தான் குப்பை கொட்டி வருகிறார். அட்லீஸ்ட் முத்துவாவது, தன் மனைவி மீனாவிற்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்கும் பொருட்டாக கோபப்பட்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் இவ்வளவு நடந்த பிறகும் முத்து வேடிக்கை மட்டும் தான் பார்க்கிறார். இதனால் கடுப்பான அண்ணாமலை, விஜயாவிடம் பேசாமல் அவமானப்படுத்துகிறார். விஜயா இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பது போல் தான் நடந்து கொள்வார். ஏனென்றால் எப்பொழுதுமே விஜயா யாரையும் மதிக்க மாட்டார், அப்படி இருக்கும் பொழுது அண்ணாமலை பேசவில்லை என்றால் வருத்தமா படப் போகிறார்.

அடுத்ததாக ரோகிணி, விஜயாவிடம் நீங்க போய் மாமாவிடம் பேசுங்கள் என்று சொல்கிறார். அதற்கு விஜயா நான் போய் பேசினால் மட்டும் பேசி விடுவாரா என்ன, அவர்தான் என்னை மதிக்கவே இல்லை. இந்த வீட்டுக்கு எஜமானியாக இந்த மீனாவை தானே நினைக்கிறார். நான் அவருக்கு வேண்டாத ஒரு பொண்டாட்டி தான் என்று கோபத்தை வெளிக்காட்டுகிறார்.

கடைசியில் இதற்கெல்லாம் காரணம் இந்த முத்து மீனாதான் என்று அப்படியே கதையை ரோகிணி திருப்பி போடப் போகிறார். இந்த ரோகினி பற்றிய விஷயம் எப்போது வெளியே வருமோ அப்போதுதான் அடங்குவார். அதுவரை ஓவராக ஆட்டம் போட்டு மீனா முத்துவை மட்டமாக பேசி அதில் குளிர் காய்ந்து கொண்டுதான் வருவார். அட்லீஸ்ட் ஜீவா கொடுத்த பணத்தின் மூலம் தான் மனோஜ் ஷோரூம் ஆரம்பித்து இருக்கிறார்கள் என்ற விஷயமாவது இப்போதைக்கு வெளிவந்தால் நன்றாக இருக்கும்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News