புதன்கிழமை, நவம்பர் 20, 2024

அன்னபூரணி பிளாப் ஆனதால் டீலில் விடப்பட்ட 2 படங்கள்.. அருவி, அறம் மாதிரியே வேணும்னா எப்படி?.

Annapoorani Movie flopped 2 films left on deal: நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி திரைப்படம் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஆனால்  இந்த படம் பிராமணர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பி, வசூலிலும் மண்ணைக் கவ்வியதோடு ஓடிடி தளத்திலிருந்தும் தூக்கினார்கள். நயன்தாராவின் படத்துக்கே இந்த நிலைமையை பார்த்துவிட்டு இப்போது ஹீரோயின் சப்ஜெக்ட்டில் தயாராகிக் கொண்டிருந்த இரண்டு படத்தை டீலில் விட்டனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஒருவர் தான் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோக்கர், அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி உள்ளிட்ட தரமான படங்கள் வெளியானது. நடிகர் சிவகுமாரின் உறவினரான எஸ் ஆர் பிரபு பெரும்பாலும் சூர்யா, கார்த்தி படங்களுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்.

இப்போது எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் வரிசையாக இரண்டு படங்கள் தயாரிக்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனா குண்டூசி விழுந்த சத்தம் கூட கேட்காத அளவிற்கு காதும் காதுமாய் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. சமீபத்தில் நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனாவை வைத்து ஹீரோயின் சப்ஜெக்டில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ‘ரெயின்போ’ என்ற படத்தின் படப்பிடிப்பு, எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் 19 நாட்கள் நடைபெற்றது. அதன் பின் திடீரென்று அப்படியே படத்தினை டிராப் செய்துவிட்டனர்.

Also Read: படமே ஓடலைன்னாலும் பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. ஓவர் அட்டூழியம் பண்ணும் நயன்தாரா

அன்னபூரணி படத்தின் தோல்வியால் ஏற்பட்ட விளைவு

அதைத் தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெக்டில் கீர்த்தி சுரேஷ் வைத்து ‘கண்ணிவெடி’ என்ற இன்னொரு படத்தையும் எஸ் ஆர் பிரபு எடுத்தார். இப்பொழுது இந்த படத்தையும் கிடப்பில் போட்டு விட்டனர். ஏனென்றால் லேடி சூப்பர் ஸ்டாரின் அன்னபூரணி படத்துக்கே இந்த நிலைமை என்றால், நம்ம எடுக்கிற இந்த இரண்டு படமும் என்ன ஆகுமோ என்ற பயத்தில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ரெண்டு படத்தையும் டீலில் விட்டுவிட்டார்.

ஹீரோயின் சப்ஜெக்ட்டில் வெளியாகும் எல்லா படமும் அருவி, அறம் படத்தைப் போன்றே இருக்கணும்னு நினைக்க கூடாது. ‘துணிஞ்சவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை தான்’ முதலில் ரசிகர்களுக்கு பிடித்தது போல் கதை இருக்கிறதா என்பதை மட்டுமே பார்க்கணும். அதன் பின்பு தான் அந்தப் படத்திற்கு பிரச்சனை வருமா? அப்படியே வந்தாலும் எப்படி சமாளிப்பது என்பதை யோசிக்கணும். ஆனா தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அன்னபூரணியை பார்த்துவிட்டு ராஷ்மிகா மந்தனாவின் ரெயின்போ மற்றும் கீர்த்தி சுரேஷின் கண்ணிவெடி படத்தை கிடப்பில் போட்டது கொஞ்சம் கூட சரியல்ல.

Also Read: நயன்தாரா வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்.. சுயமரியாதை காசு கொடுக்குமா, பாலிவுட் வாய்ப்பு முக்கியம் பிகிலு

- Advertisement -spot_img

Trending News