சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மதக் கலவரத்தால் ஓடிடி-யிலிருந்து நீக்கப்பட்ட படம்.. தர்ம அடி வாங்கும் நயன்தாராவின் மார்க்கெட்

Annapoorani Controversey: பொதுவாக சினிமா கலைஞர்களுக்கு 25, 50, 75 ஆவது படங்கள் முக்கியமான ஒன்றாக அவர்களுடைய சினிமா கேரியரில் பார்க்கப்படும். அப்படி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு 75 ஆவது படமாக ரிலீஸ் ஆன அன்னபூரணி படம் அவருக்கு சூனியமாக அமைந்துவிட்டது. இந்த படம் டிசம்பர் ஒன்றில் ரிலீஸ் ஆகி இருந்தாலும் கடந்த சில தினங்களாக தான் அதிக எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அன்னபூரணி படம் நெட்பிலிக்சில் வெளியானது தான்.

நயன்தாரா, சத்யராஜ், ஜெய், ரெடிங் கிங்ஸ்லீ, கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் இணைந்து நடித்த அன்னபூரணி திரைப்படத்தை ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சமையல் கலையில் சாதிக்க வேண்டும் என நினைத்து போராடி அதில் ஜெய்ப்பது தான் இந்த படத்தின் கதை.

இந்த படம் நெட் பிலிக்ஸ் தளத்தின் மூலம் ரிலீஸ் செய்யப்பட்டு சில தினங்களாகிய நிலையில், மத உணர்வை புண்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அன்னபூரணி படத்தில் நயன்தாரா இந்து மதத்தை சார்ந்தவராகவும், ஜெய் முஸ்லிம் மதத்தை சார்ந்தவராகவும் காட்டி இருப்பார்கள். இதனால் இந்த படம் லவ் ஜிகாத் கான்செப்ட்டை கொண்டு உருவாகி இருப்பதாக ஒரு பக்கம் சர்ச்சை கிளம்பியது.

Also Read:சூர்யவம்சம் சின்ராசு போல மைக்கை பிடித்ததும் கிரிஞ்சு பண்ணிய நயன்.. பிசினஸ ஓட்ட என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு

மேலும் இந்த படத்தில் ஒரு காட்சியில் நயன்தாரா, புர்கா போட்டுவிட்டு பிரியாணி சமைத்தால் தான் சுவையாக இருக்கும் என்று சொல்லிவிட்டு நமாஸ் செய்து முடித்த பிறகு பிரியாணி செய்வார். இந்த காட்சியும் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ஜெய் ஒரு காட்சியில் ராமர் வனவாசம் சென்றிருந்தபோது மாமிசம் சாப்பிட்டதாக சொல்லி, நயன்தாராவை மாமிசம் சாப்பிட சொல்லுவார்.

அன்னபூரணி சர்ச்சையில் எடுக்கப்பட்ட  முடிவு

இதையெல்லாம் குறிப்பிட்டு அன்னபூரணி படம் இந்து மதத்தின் உணர்வை புண்படுத்துவதாக புகார் எழுந்ததோடு, போலீஸ் வழக்காகவும் மாறி இருக்கிறது. மேலும் இந்து அமைப்பினரால் நெட்பிலிக்ஸ் நிறுவனம் முற்றுகை இடப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் அன்னபூரணி படத்தில் மத உணர்வை காயப்படுத்தும் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க இருப்பதாகவும், அதுவரையில் நெட்பிலிக்ஸ் தளத்திலிருந்து இந்தப் படம் நீக்கப்படுவதாகவும் தெரிவித்துவிட்டது.

notice
notice

நயன்தாராவுக்கு சமீப காலமாகவே சினிமா துறையில் மார்க்கெட் அந்த அளவுக்கு சரியான நிலவரத்தில் இல்லை. எப்படியாவது தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்ற கனவில் தான் அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் தற்போது அவருடைய சினிமா கேரியரில் பெரிய சர்ச்சையாக மாறி இருக்கிறது. இதைத்தான் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்று சொல்வார்கள் போல.

Also Read:தொடர்ந்து 11 படங்கள் பிளாப் கொடுத்த நயன்தாரா.. பட்டத்தை பறிக்க போகும் அந்த நடிகை

Trending News