Annapoorani, Parking Collection : சென்னை இப்போது மிக்ஜாம் புயலால் தத்தளித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் நிறைய படங்கள் வெளியான நிலையில் புயல் மற்றும் வெள்ளம் ஆகிய பாதிப்பின் காரணமாக படங்களின் வசூல் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது.
அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான பார்க்கிங் படங்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு போகவில்லை. பாலிவுட்டில் ஜவான் படம் மட்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த சூழலில் அன்னபூரணி படத்தை நயன்தாரா பெரிதும் நம்பிக் கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வந்தது. முதல் நாளில் 60 லட்சம் மட்டும் வசூல் செய்த நிலையில் நல்ல வரவேற்பின் காரணமாக இரண்டாம் நாளில் 90 இலட்சம் வசூலித்தது.
Also Read : 75வது படத்தில் அன்னபூரணியாக ஜெயித்தாரா நயன்தாரா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
ஆனால் நேற்றைய தினம் வெறும் 20 லட்சம் மட்டுமே அன்னபூரணி வசூல் செய்திருக்கிறது. ஏனென்றால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இதுவரை மூன்று கோடியை கூட அன்னபூரணி படம் நெருங்கவில்லை.
அதேபோல் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்எஸ் பாஸ்கர் கூட்டணியில் வெளியான பார்க்கிங் படத்திற்கும் ரசிகர்கள் ஏகபோக வரவேற்பை கொடுத்திருந்தனர். இந்நிலையில் முதல் நாளில் 50 லட்சம் இரண்டாவது நாளில் 65 மற்றும் மூன்றாவது நாள் முடிவில் 75 லட்சம் வசூல் செய்திருந்தது. நான்காவது நாள் முடிவில் வெறும் 30 லட்சத்திற்கு உள்ளாகத்தான் பார்க்கிங் படம் வசூல் செய்திருக்கிறது.