திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

முத்து படத்தில் நடித்த அண்ணாத்த பட அப்பத்தா.. என்னது ரஜினியை விட மூணு வயசு கம்மியா?

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினி நடிப்பில் வெளியான படம் அண்ணாத்த. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ஓரளவு நல்ல லாபத்தை பெற்று தந்தது. இந்தப் படத்தில் பெரியாத்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் குலப்புலி லீலா.

இவர் மலையாள சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர். அதாவது கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் மருது படத்தில் விஷாலின் பாட்டியாக இவர் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

Also Read : அகில உலக சூப்பர் ஸ்டாரிடம் சிக்கிய 5 படங்கள்.. ரஜினியின் வெற்றிப் படத்தை வச்சு செஞ்சுட்டாருல!

இதை தொடர்ந்து ஐரா, மாஸ்டர் படங்களில் நடித்த இவருக்கு ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இந்நிலையில் ஏற்கனவே 26 வருடங்களுக்கு முன்பே ரஜினி படத்தில் குலப்புலி லீலா நடித்துள்ளார்.

அதாவது 1995 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் முத்து. இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினி மரத்தின் மேல் உள்ள போது கீழே சிலர் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அந்த காட்சியில் இவரும் ஒருவராக நடித்திருந்தார்.

Also Read : ரஜினிக்கு கண்டனம் தெரிவித்த ஆணையம்.. தெளிவாக தெரியாமல் சூப்பர் ஸ்டார் பேசிய பேச்சு

அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி ரஜினியை விட 3 வயது இளமையானவராம் குலப்புலி லீலா. ஆனாலும் அண்ணாத்த படத்தில் ரஜினியை விட மூத்தவராக பெரியா ஆத்தா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

muthu-movie

இவ்வாறு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் தனது நடிப்பை காட்டி அசத்தி வருகிறார் குலப்புலி லீலா. மேலும் தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதில் பெரும்பாலும் ஹீரோக்களின் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Also Read : உலகளவில் பொன்னியின் செல்வன் செய்த மொத்த வசூல்.. ரஜினியின் 2.0-வை ஓரங்கட்ட போகும் மணிரத்தினம்

Trending News