வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பொங்கலை அதிறவிட்ட அண்ணாத்த படம்.. எத்தனை குடும்பங்கள் பார்த்தது தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி இருந்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளி சரவெடியாக வெளியானது. சன் பிக்சர்ஸ் மிக பிரமாண்டமாக தயாரித்த இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

மேலும் இந்த திரைப் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

ரஜினிகாந்தின் முந்தைய திரைப்படங்கள் அனைத்தும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகி இருந்தது. ஆனால் அண்ணாத்த திரைப்படம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ரஜினியின் பழைய துள்ளலும், துறுதுறுப்பும் நிறைந்து ரசிகர்களை கவரும் வகையில் அமைந்தது.

இதுவே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும் படத்தின் பாடல்களும், தங்கை சென்டிமென்ட்டும் அற்புதமாக காட்டப்பட்டிருந்தது. இதனாலேயே இல்லத்தரசிகள் உட்பட குடும்பங்கள் அனைவரும் பார்க்கும் படமாக இது அமைந்தது.

அண்ணாத்த திரைப்படம் தியேட்டரில் வெளியான சில நாட்கள் கழித்து சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. தியேட்டரில் கிடைத்த வரவேற்பு போலவே ஓடிடி தளத்திற்கும் அதிகமான வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து கடந்த வாரம் பொங்கல் தினத்தன்று அண்ணாத்த திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பானது.

மேலும் பல சின்னத்திரை சேனல்களும் ரசிகர்களை கவரும் வகையில் பல திரைப்படங்களை ஒளிபரப்பினாலும் அண்ணாத்த திரைப்படம் தான் அனைவரின் பேவரைட் ஆக இருந்தது. இதனால் இப்படம் தற்போது டிஆர்பி யில் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதுவரை எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவுக்கு 17.37 மில்லியன் பார்வையாளர்கள் இந்த திரைப்படத்தை கண்டுகளித்துள்ளனர். இது குறித்த தகவல்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சின்னத்திரை மற்றும் பெரிய திரை இரண்டிலும் சாதனை படைத்த அண்ணாத்த திரைப்படத்தை ரஜினியின் ரசிகர்கள் தற்போது சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.

Trending News