ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகர் ரஜினியை பெரிய திரையில் பார்க்கும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் முதன் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் ரஜினி இணைந்துள்ளதால் அண்ணாத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுதவிர படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
என்னதான் அண்ணாத்த படம் சிவாவின் முந்தைய படமான விஸ்வாசம் படத்தின் இரண்டாம் பாகம் போல் இருப்பதாக பல விமர்சனங்கள் எழுந்தாலும், டீசர் மற்றும் டிரைலர் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இவை அனைத்திற்கும் காரணம் ரஜினி என்ற ஒன்மேன் ஆர்மி மட்டுமே.
சரி விஷயத்திற்கு வருவோம். அண்ணாத்த படம் தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாக உள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் படம் திரையரங்கில் வெளியாகி நான்கு வாரங்களுக்கு பின்னர் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆம் திரையரங்கில் வெளியான நான்கு வாரங்களுக்கு பின்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அண்ணாத்த படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சன் நெக்ஸ்ட் இருக்கும்போது நெட்ப்ளிக்ஸ் ஏன் என ரசிகர்கள் குழம்பினார்கள். ஆனால் நெட்ப்ளிக்ஸ் யானை விலைக்கு கேட்டதால் கொடுத்துவிட்டார்களாம்.
படம் வெளியான சில நாட்களிலேயே படக்குழுவினர் ஏன் இந்த முடிவை எடுத்துள்ளனர் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதற்கு தியேட்டர்காரர்கள் மிகவும் கவலையில் உள்ளனர். அத்தனை சரிகட்ட அண்ணாத்த டிக்கெட் ரேட்டின் விலை உச்சத்தில் வைத்து விற்க திட்டமாம். எல்லாம் உஷாரா இருங்க மக்களே.