ரஜினிகாந்த் சமீபத்தில் நடித்த படங்களை வைத்து ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக என செய்திகள் பரவியது. அப்படி இருந்து விடக் கூடாது என்றுதான் அண்ணாத்த படத்தை முடிவு செய்தார் என நினைக்க தோன்றுகிறது. ரஞ்சித் ரஜினியை வைத்து இரண்டு முறை படம் எடுத்ததால் ரஜினி அவர் சமூகத்திற்கு ஆதரவாளர் என்ற நிலை உருவாகியது.
ஆனால் ரஜினிகாந்த்தை பொருத்தவரையில் எந்த சமூகத்திற்கும் எதிரி அல்ல அனைவர்க்கும் பொதுவானவர். ஏற்கனவே எஜமான் படத்தில் நடித்துவிட்டார் தற்பொழுது வேறு ஒரு சமூகத்திற்கான படமாக எடுக்க வேண்டும் என்று அண்ணாத்த படத்தில் நடித்திருப்பதாக ஒரு சில சம்பவங்கள் கூறுகிறது
அண்ணா திரைப்படத்தின் போஸ்டரில் இருந்து தெரிந்து கொள்ளலாம். மஞ்சள் நிறத்தில் சுற்றிதான் இந்த போஸ்டர் இருக்கும். ஏனென்றால் பொதுவாக ஒரு சில சமூகத்தினர் இந்த மஞ்சள் நிறத்தை மையமாக வைத்து கொடிகளை உருவாக்குவார்கள்.
போதாத குறைக்கு அந்தப்படத்தில் வேல ராமமூர்த்தி வேறு நடித்து இருக்கிறார். அவரும் ரஜினி கூடவே வர காட்சிகள்தான் இருக்குமாம். திருவிழா கூட்டங்கள், கிராம சண்டை காட்சிகள் என அனைத்தும் முத்தையா படத்தில் வருவது போல்தான் இருக்கிறதாம்.
சமீபத்தில் வெளியான அண்ணாத்த பாடலின் வரிகள் கூட ஒரு சமூகத்திற்கான படம் போல தெரிகிறதாம். எஜமான் படத்திலும், சின்ன கவுண்டர் படத்திலும் ரஜினியும் விஜயகாந்தும் பஞ்சாயத்து தலைவர் போல நடித்திருப்பார்கள். அதுபோலவே அண்ணாத்த பாடலின் போதும் அனைவரும் வணக்கம் வைப்பார்கள். இது எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அப்படிதான் தெரிகிறது என ஒருதரப்பு கூறுகிறது.
இதே மற்றொரு தரப்பு, இந்த காட்சிகள் எல்லாம் அப்படி அமைந்தாலும் ஆரம்பத்தில் கிராம பக்கம் தொடக்கி வெளிநாடு வரை கதை செல்லும் படமாக இருக்கும் என கூறுகிறார்கள். ஏன் என்றால், எல்லா போஸ்டர்களிலும் பேக்ரௌண்டில் பலமாடி பில்டிங்தான் இருக்கிறதாம். சிவா காரணம் இல்லாமலா அப்படி வைத்திருப்பார்.