வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

போலீஸ் கிட்டையே தில்லா வச்ச டிமாண்ட்.. முதலில் சல்மான், இப்போ ஷாருக்கான், இது மிரட்டல் சீசன் போல

பாலிவுட் சூப்பர்ஸ்டாராக வளம் வரும் ஷாருக்கானுக்கு உலகெங்கிலும் ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் இவர், படத்தாயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். அதிலும் தனது படங்களைத் தயாரித்து பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஷாருக்கானுக்கு போட்டியாக படங்களில் நடித்து பட்டய கிளப்பும் சல்மான் கானுக்கு ஒரு பிரச்சனை வந்தது. தற்போது அதே பிரச்சனையை, ஷாருக்கானுக்கு வந்துள்ளது. சல்மான் கான் அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ் படத்தில் நடிக்கவுள்ளார். அப்போது தான் அவர் உயிருக்கே உத்தரவாதம் இல்லை என்பது போல ஒரு நிகழ்வு நடந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருந்தது. இந்த கொலை மிரட்டலையடுத்து அவருக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்

இந்த நிலையில் தற்போது ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக படங்களில் மட்டும் தான், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்று காண்பிப்பார்கள். இப்போது என்னவென்றால், இந்த பிரச்சனையிலும் அதையே நிரூபித்துள்ளனர்.

ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வருவது, இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு அக்டோபரிலேயே ஷாருக்கானிற்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

இப்படி இருக்க சல்மான் கானிடம் ஏற்கனவே 5 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தற்போது ஷாரூக்கானிடன் 50 லட்சம் கேட்டு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த மிரட்டலை, போலிசாருக்கே கால் செய்து விடுத்துள்ளனர்.

மும்பை பாந்திரா போலீஸ் ஸ்டேஷனுக்கு கால் செய்த அந்த மர்ம நபர், “நடிகர் ஷாருக்கான் 50 லட்சம் தரவில்லை என்றால் அவரை கொலை செய்துவிடுவேன். அவர் நம்பர் என்கிட்ட இல்ல, அதுனால் நீங்களே பேசி வாங்கி கொடுங்க” என்று கூறியிருக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள், “தலைக்கு தில்ல பாத்தியா” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News