செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கண்ணிவெடி வைக்கப் போகும் கீர்த்தி சுரேஷ்.. அறிவிப்புடன் வெளியான புகைப்படம்

Actress Keerthy Suresh: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் மாமன்னன் படம் வெளிவந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியின் கடைசி படமாக உருவான இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது அவரின் அடுத்த படம் பற்றிய ஒரு அப்டேட் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்கும் இப்படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். சோலோ ஹீரோயினாக அவர் கலக்க உள்ள இந்த படத்திற்கு கண்ணிவெடி என்று பெயரிடப்பட்டுள்ளது.

Also read: கோடிகளில் கல்லா கட்டும் கீர்த்தி சுரேஷ்.. முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதற்கு முன்பாக இவர் சாணி காயிதம் ஆகிய பல படங்களில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படக்குழுவுடன் கீர்த்தி சுரேஷ்

keerthy-suresh-kannivedi
keerthy-suresh-kannivedi

மேலும் இப்படத்தில் விஜய் டிவி பிரபலமான விஜே ரக்சன், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த ரக்சன் ஏற்கனவே துல்கர் சல்மான் உடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்திருந்தார்.

Also read: அனுஷ்கா மாதிரி எனக்கு கேரியர் போயிடக் கூடாது.. உடல் எடை குறைத்த ரகசியத்தை உடைத்த கீர்த்தி சுரேஷ்

அதை அடுத்து தற்போது மறக்குமா நெஞ்சம் என்ற படத்தில் நடித்து வரும் இவர் கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் இணைந்துள்ளார். அந்த வகையில் இப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக போடப்பட்டிருக்கிறது. அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் இதன் மூலம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அறிவிப்புடன் வெளியான புகைப்படம்

kannivedi-keerthy
kannivedi-keerthy

மேலும் இப்படம் ஆக்சன் திரில்லர் கலந்த கலவையாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இப்பட பூஜையில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட போட்டோவும் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கண்ணிவெடி பட பூஜை

keerthy-kannivedi
keerthy-kannivedi

Trending News