ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தலைதெறிக்க ஓடும் அருண் விஜய்.. ஓடாத படத்திற்காக இன்றுவரை தொல்லை கொடுக்கும் இயக்குனர்

அருண் விஜய் சமீபகாலமாக படங்கள் ஓடாமல் திணறி வருகிறார் . என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக மிரட்டிய அவர் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து அசத்தி வந்தார். இந்த படத்தின் மூலம் அவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்தது

அதன்பின் சிறிது காலம் சினிமாவில் அவருக்கு ஏறுமுகமாகவே இருந்தது. அடுத்த ரவுண்ட் மனுசன் ரீ என்டரியில் அருண் விஜய் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பல தடைக் கற்கள் வந்தது. அடுத்தடுத்து பல படங்கள் நடித்தாலும் அந்த அளவிற்கு போகவில்லை

குறிப்பாக அருண் விஜய் அதிர்ஷ்டம் இல்லாத நடிகர். திறமைகள் பல இருந்தாலும் சினிமாத்துறையில் ஜெயிப்பதற்காக அவருக்கு அந்த அதிர்ஷ்டம் இன்றுவரை கைகூடவில்லை என்று சொல்லலாம். அதுமட்டுமின்றி சண்டை காட்சிகள் அனைத்திலும் உடம்பை ஏற்றி மிரட்டி வருவார், இருந்தாலும் அவருக்கு பல சோதனைகள் வந்த வண்ணம் இருக்கிறது

சமீபத்தில் அவர் நடித்த யானை படம் கூட இன்னும் வெளிவராமல் திணறி வருகிறது. இந்த படத்தின் இயக்குனர் ஹரி. அவரின் படத்திற்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

அது போகட்டும் இப்பொழுது ரசிகர் ஒருவர் கார்த்திக் நரேனிடம் ட்விட்டர் பக்கத்தில், மாபியா 2 படம் எப்பொழுது எடுக்கப் போகிறீர்கள் என்று ஒரு கேள்வி கேட்டுள்ளார். கூடிய விரைவில் வரும் என்று பதிலளித்த கார்த்திக் நரேன், அருண் விஜய்யிடம் போனில் கேட்டிருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அருண் விஜய் என்ன செய்வதென்று தெரியாமல் சமாளித்துள்ளார். இப்பொழுது சிறிது ஓய்வு வேண்டும் நான் ரெடியாகி விட்டு சொல்கிறேன் என்று தட்டிக் களித்துள்ளார் அருண் விஜய். இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ஓடாத படத்துக்கு இரண்டாம் பாகம் வேறயா என்று கலாய்த்து வருகின்றனர்.

Trending News