முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி(Vijay Sethupathi) நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்றை முன்னணி நடிகர்கள் சேர்ந்து கொண்டு பந்தாடுவது பலருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது.
விஜய் சேதுபதி ஒரு வருடத்திற்கு ஏகப்பட்ட படங்கள் நடித்தாலும் அதில் ஒரு சில படங்கள் மட்டுமே மனதில் பதியும்படி தரமான படங்களாக அமைந்து வருகிறது. அந்த வகையில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் விக்ரம் வேதா.
தமிழகத்தில் விக்ரம் வேதா படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. விஜய் சேதுபதியை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்த படங்களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக இடம் பிடித்துள்ளது.
இந்த படத்தை மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்வதற்காக போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில் ஹிந்தியில் முதலில் அமீர்கான் மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
முதலில் அமீர்கான் அந்த படத்திலிருந்து விலக ரித்திக் ரோஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் தற்போது ரித்திக் ரோஷனும் அந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம். இதற்கு காரணம் அவரது கால்ஷீட் பிரச்சனை தான் இருக்கிறார்கள் பாலிவுட் வாசிகள்.
பேசாமல் இந்த படத்தை ரீமேக் செய்யாமல் இருந்திருக்கலாம் என தற்போது விஜய் சேதுபதியின் வட்டாரங்கள் கவலைப்படுகிறதாம். ஒரு நல்ல படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் இவ்வளவு யோசிக்கிறார்கள் என்ற சங்கடமும் நிகழ்ந்தது வருகிறது.
