வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மீரா மிதுனின் காதலனை தொடர்ந்து கைதாக உள்ள பிரபலம்.? போதைப்பொருள், மோசடி என தொடரும் வழக்கு

பல பிரபலங்களை சமூகவலைதளங்களில் வம்பு இழுத்துக் கொண்டிருந்த சூப்பர் மாடலான மீரா மிதுன், சமீபத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை தரக்குறைவாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு அதன் பின் நடந்த போலீஸ் விசாரணையில், மாத்தி மாத்தி பேசி வருவதால் மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் பெற போலீசார் திட்டமிட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து மீரா மிதுன் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவையும் படம் பிடித்து வெளியிட்ட குற்றத்திற்காக அவருடைய காதலரான அபிஷேக் ஷாம் என்பவரையும் கைது செய்த போலிஸார் இருவரையும் புழல் சிறையில் கம்பி என்ன வைத்துள்ளனர். மேலும் மீராமிதுன் பல நட்சத்திர ஓட்டல்களில் தங்கி, போதைப்பொருள் பயன்படுத்தி உல்லாசமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் தற்போது மீரா மிதுன் மீது போடப்பட்ட வழக்கில் இருந்து தப்பிக்கவும், போதைப்பொருள் மற்றும் பல்வேறு மோசடிகளுக்கு மீரா மிதுனுடன் உறுதுணையாக இருந்த பிரபல பெண் தோழி ஒருவர் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

meera-mithun
meera-mithun

எனவே அவரும் கூடிய விரைவில் போலீஸ் விசாரணையில் சிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் மீரா மிதுன் அவதூறு பேசுவது மட்டுமல்லாமல் போதைப்பொருள், மோசடி என இவரைப்பற்றிய பெரிய லிஸ்டே ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளது.

Trending News