ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

LCU-வில் இணையும் 2 சாக்லேட் பாய்ஸ்.. ரெண்டு குழந்தை நடிகரையும் இப்படி கோத்து விட்டீங்களே

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் LCU கதையம்சம் கொண்ட பென்ஸ் படம் உருவாகியுள்ளது. இது தரமான கதைக்களத்தோடு உருவாகி வரும் வேளையில், அடுத்தடுத்து பல நடிகர்கள் படத்தில் இணைவது, பயங்கரமான ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்று சொன்னபோதே, படம் நிச்சயம் பல நாள் பேசப்படும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபட்டது.

இப்படி இருக்க, சமீபத்தில் இந்த படத்தில் மாதவன் வில்லனாக மிரட்டி எடுக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும் மாதவனை ஒரு ஸ்வீட்டான் சாக்லேட் பாயாக பார்த்து பழகியவர்களுக்கு இவர் எப்படி பட்ட வில்லத்தனத்தை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மாதவன் வில்லத்தனத்தில் மிரட்டி எடுக்கும் சைத்தான் படத்தை பார்த்தவர்கள், நிச்சயம் தரமாக இருக்கும் என்றும் கூறிவருகிறார்கள். இந்த நிலையில், இந்த ஒரு சாக்லேட் பாய் மட்டுமல்ல, வேறு ஒரு முக்கியமான சாக்லேட் பாயும் இணைகிறார்.

இனி சித்ரா அரவிந்தன் இல்ல..

இந்தியன் 2 வெளியானதில் இருந்து, சித்தார்த்தை சித்ரா அரவிந்தன் என்று கூறி பயங்கரமாக ட்ரோல் செய்தார்கள் நெட்டிசன்கள். இந்தியன் 2 படம் வெளியாவதற்கு முன்பு, சித்தா படத்தில் நடித்து தான் சேர்த்து வைத்த பெயரை அப்படியே இழந்துவிட்டார். தற்போது இவர் நடிப்பில் மிஸ் யு படம் உருவாக்கி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

அந்த படம் சித்தார்த்தின் மார்க்கெட்டை முடிவு செய்யும் அடுத்த முக்கிய படமாக உள்ளது. இந்த நிலையில் LCU-வில் இணைந்துள்ளார் சித்தார்த். மாதவன் படத்தில் வில்லத்தனத்தில் மிரட்டும் நிலையில், சித்தார்த் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் உள்ளது.

Trending News