வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தொடரும் விவாகரத்து அறிவிப்பு.. ஏ ஆர் ரகுமானை அடுத்து பிரிந்த இன்னொரு ஜோடி

AR Rahman: கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் அடுத்தடுத்த விவாகரத்து அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் இந்த வருடம் நாம் எதிர்பார்க்காத பல பிரபலங்கள் தங்களுடைய பிரிவை அறிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜிவி பிரகாஷ் சைந்தவி, ஜெயம் ரவி ஆர்த்தி வரிசையில் தற்போது ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு இணைந்துள்ளனர். எந்த சர்ச்சையிலும் சிக்காத இசை புயல் தன் மனைவியை பிரிந்திருப்பது யாராலும் நம்ப முடியவில்லை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

அதை அடுத்து இவர்களுடைய பிரிவுக்கு என்ன காரணம் என ஆளாளுக்கு ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பித்து விட்டனர். ஆனால் இசைமீது அதிக காதல் கொண்ட ஏ ஆர் ரகுமான் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவில்லை.

ஏ ஆர் ரகுமானை தொடர்ந்து அடுத்த விவாகரத்து

இதனால் விரக்தி அடைந்த அவருடைய மனைவி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என கூறுகின்றனர். ஆனால் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை அவ்வளவு எளிதில் முடிந்து விடாது. விரைவில் இவர்கள் இணைவார்கள் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க இந்த விவாகரத்து அறிவிப்பு வந்த கையோடு மற்றொரு பிரிவு செய்தியும் வந்துள்ளது. அதாவது ஏ ஆர் ரகுமானிடம் Basist ஆக பணிபுரிந்து வரும் மோஹினி டே தனது கணவரை பிரிய போவதாக அறிவித்துள்ளார்.

ar rahman
ar rahman

28 வயதாகும் இவர் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறார். அதேபோல் சொந்தமாக இசைக்குழு ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் திடீரென தன்னுடைய விவாகரத்தை அறிவித்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதுவும் ஏ ஆர் ரகுமான் விவாகரத்து அறிவித்த உடனேயே இந்த செய்தி வெளியானது சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையும் நெட்டிசன்கள் அதிர்ச்சி விலகாத நிலையில் கிசுகிசுத்து வருகின்றனர்.

Trending News