வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாலாவை போல காய் நகர்த்தும் மற்றொரு இயக்குனர்.. நாசுக்காக வெளியில் தெரியாமல் செய்யும் வேலை

40 நாட்கள் ஷூட்டிங் முடிந்த நிலையில் சூர்யாவின் 41-வது படமான வணங்கான் படத்தில் ஒரு சில கதை மாற்றம் ஏற்பட்டதால்,  சூர்யாவிற்கு செட் ஆகாது என்று நினைத்து இந்த படத்தை நிறுத்தி விட்டதாக சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

ஏற்கனவே இந்த படப்பிடிப்பின் போது சூர்யாவிற்கும் பாலாவிற்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு பாதி படப்பிடிப்பு நடந்த நிலையில், அந்தப் படத்தை ட்ராப் செய்வது சினிமா வட்டாரத்தில் பாலாவிற்கு ஒரு நற்பெயர் கிடையாது.

Also Read: எவ்வளவுதான் நான் பொறுத்து போறது, உன் சங்காத்தமே வேண்டாம்.. பாலா வெளியிட்ட அறிக்கையால் அதிர்ச்சியில் சூர்யா

இவரை ஒரு டென்ஷன் பார்ட்டி பெரும் குழப்பவாதி என்றெல்லாம் கூறி வருகின்றனர். மேலும் ஷூட்டிங் ஸ்பாட் நடிகர் நடிகைகளை எரிச்சல் அடைய செய்வார். அதுமட்டுமில்லாமல் அனாவசியமாக கோபப்படுவது, அதனால் தடித்த வார்த்தைகளை பயன்படுத்துவது என்றெல்லாம் இவர் மீது குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தது

ஆனால் இவருக்கு எப்பொழுதுமே கதை விஷயத்தில் ஹீரோக்களை மட்டுமல்ல சூட்டிங் ஸ்பாட்டில் உள்ள அனைவரையும் குழப்பும் குணமும் உண்டு. கிட்டத்தட்ட இவர் கேரக்டர் போலவே வெற்றி இயக்குனர் ஒருவர் வெளியில் தெரியாமல் செயல்படுவாராம்.

Also Read: நான் வளர்த்த கடா, கொடுத்ததை திங்கனும்.. அண்ணனுக்காக இறங்கிய சூர்யாவிற்கு இப்படி ஒரு நிலைமையா!

பல ஸ்டைலிஸ் வெற்றி படங்களை கொடுத்த கௌதம் வாசுதேவ் மேனன் தான் அந்த இயக்குனராம். இவர் காதலை தன்னுடைய படத்தில் வித்தியாசமான கோலத்தில் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால் இவரும் பாலாவை போலவே கதை விஷயத்தில் ஒரு தெளிவு இல்லாமல் தான் செயல் படுவாராம். இவரும் சரியான ஸ்க்ரிப்டை கொடுக்காமல் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை குழப்புவதுண்டு.

ஆனால் இவரைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியில் வெளி வராத அளவுக்கு காய் நகர்த்துவார். ஏனென்றால் அப்படி இருந்தால் தானே மற்ற பிரபலங்களும் இவருடைய படங்களில் நடிக்க ஒத்துக் கொள்வார்கள். இருப்பினும் தற்போது வணங்கான் படத்தை ட்ராப் செய்த சூர்யா-பாலா குறித்த செய்திகள் வெளிவந்த பிறகு தான் கௌதம் மேனனை பற்றிய தகவலும் வெளிப்படுகிறது.

Also Read: சூர்யாவை தொறத்திட்டு பாலா எடுக்கப்போகும் வணங்கான்.. அடுத்த ஹீரோ யார் தெரியுமா?

Trending News